Pages

Monday, April 18, 2016

கை தட்டினால் இவ்ளோ பலன்களா?.. கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயம்!...

கை தட்டி ரசித்து சிரிப்பதன் மூலம் எந்த நோயும் அண்டாமல் நம்மை பாதுகாக்க முடியும் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இதய நோய் உள்பட எல்லா நோய்களுக்கும் காரணமாக இருப்பது நம் மனம் தான். அதனால் தான் எண்ணம் போல் வாழ்வு அமையும் என்று கூறியுள்ளனர். எதற்கும் உணர்ச்சி வசப்படாமல் அனைத்தையும் சாதாரணமாக எடுத்துக்கிற நிலை வந்தால் உடம்பை எந்த நோயும் நெருங்காது என்கின்றனர் மருத்துவர்கள்.

வெற்றி தான் மகிழ்ச்சியின் திறவுகோல் என்பதை விட மகிழ்ச்சியாக இருப்பது தான் வெற்றி என்று எண்ண வேண்டும். இதற்கு நன்றாக மனது விட்டு சிரிப்பதும், கை தட்டி ரசிப்பதும் அவசியம் என்கின்றனர் உளவியல் மருத்துவர்கள்.
கை தட்டுவதே ஒரு சிகிச்சை தான். கை தட்டும் போது அக்குபிரஷர் ட்ரீட்மென்ட் நடக்கிறது. மூளையும் பிற உறுப்புகளும் உற்சாகமா இயங்குகிறது என்கிறனர் மருத்துவர்கள்.
மனிதர்களின் கைகளில் உள்ள நரம்புகள், இதயம், சிறுநீரகம், லிவர், நுரையீரல் போன்றவற்றுடன் தொடர்பு கொண்டுள்ளது. இரண்டு கைகளையும் இணைத்து தட்டுவதன் மூலம் நரம்புகள் தூண்டப்படுகின்றன. இதனால் பல வித நோய்கள் ஏற்படுவது கட்டுப்படுத்தப்படுகிறது.
நம் உடம்பில் உள்ள ரத்த நாளங்கள் வெறும் 2 மில்லிமீட்டர் குறுக்களவு கொண்டவை. டென்ஷன் ஆகும்போது அட்ரினலின், கார்ட்டிசால் ஹார்மோன்கள் அதிகமா சுரந்து அந்த நாளங்களில் அடைப்பை ஏற்படுத்திடும். இந்த சுரப்பை கட்டுப்படுத்தும் சக்தி இயல்பாவே நம் உடலில் இருக்கிறது.
சீரான உணவு, முறையான உடற்பயிற்சி, கெட்ட பழக்கங்கள் இல்லாத நல்ல வாழ்க்கை முறை தேவை. மனசு மகிழ்ச்சியா இருந்தா, என்டார்பின், மெலட்டோனின், செரட்டோனின் ஹார்மோன்களும், ஹெச்.டி.எல்ங்கிற நல்ல கொழுப்புகளும் உருவாகும்.
99 சதவீதம் அடைப்பு இருந்தாக்கூட தானா கரைஞ்சிடும். இது கற்பனையில்லை. மருத்துவ உண்மை என்று உறுதியாகச் சொல்கின்றனர் மருத்துவர்கள்.
தினசரி காலையில் 20 நிமிடங்களுக்கு கை தட்டுங்கள் உங்களுக்கு எந்த நோய் இருந்தாலும் குணமாகும் என்று உறுதியாகச் சொல்கின்றனர் மருத்துவர்கள்.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.