அண்ணாமலைப் பல்கலையின் தொலைமுறைக் கல்வி இயக்ககத்தின், 2016 - 17ம் கல்வியாண்டுக்கான மாணவர் சேர்க்கை சிங்காநல்லுார் படிப்பு மையத்தில் துவங்கியுள்ளது.
அனைத்து இளங்கலை மற்றும் பட்டயப்படிப்புக்கான விண்ணப்ப கட்டணம், 100 ரூபாயாகவும், எம்.பி.ஏ., எம்.சி.ஏ., மற்றும் எம்.எஸ்.சி., ஐ.டி., கான விண்ணப்ப கட்டணம், 250 ரூபாய், பி.எட்., படிப்புக்கு, 500 ரூபாயும் விண்ணப்ப கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இப்படிப்புகளில் சேரும், எஸ்.சி., எஸ்.டி., மாணவர்களுக்கு குடும்ப ஆண்டு வருமானம், 2.5 லட்சம் ரூபாய்க்குள் இருந்தால், அவர்களது கல்விக் கட்டணம் முழுவதையும் தமிழக அரசு கல்வி உதவித்தொகையாக வழங்குகிறது. மாற்றுத்திறன், பார்வையற்ற மாணவர்களுக்கு கல்விக் கட்டணம் செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்கப்படுகிறது.
சிங்காநல்லுாரிலுள்ள படிப்பு மையத்தில் சேர்க்கைபுரிய, 0422 2594245, 97860 38666 என்ற எண்களில் மாணவர்கள் தொடர்பு கொள்ளலாம் என, மைய அலுவலர் ஜெயபிரகாஷ் தெரிவித்தார்.
No comments:
Post a Comment
உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.