Pages

Thursday, April 7, 2016

ஓட்டுப்பதிவு அன்று முழு விடுமுறை

'தேர்தல் நடைபெறும், மே, 16ம் தேதி, அனைத்து நிறுவனங்களும், அனைத்து பணியாளர்களுக்கும், ஊதியத்துடன் கூடிய விடுப்பு வழங்க வேண்டும்' என, தொழிலாளர் நலத்துறை கமிஷனர் அமுதா தெரிவித்து உள்ளார்.அவரது அறிக்கை: மக்கள் பிரதிநிதித்துவ சட்ட அடிப்படையிலும், தேர்தல் கமிஷனின் அறிவுரைகளின்படியும், ஓட்டுப்பதிவு நாள் அன்று, விடுப்பு வழங்க வேண்டும்.
தொழில் நிறுவனங்கள், கடைகள் மற்றும் வர்த்தக நிறுவனங்கள் (தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் உட்பட), உணவு நிறுவனங்கள், தொழிற்சாலைகள், தோட்ட நிறுவனங்கள், மோட்டார் போக்குவரத்து நிறுவனங்கள், பீடி மற்றும் சுருட்டு நிறுவனங்கள் ஆகியவற்றில் பணிபுரியும் தினக்கூலி, தற்காலிக, ஒப்பந்தப் பணியாளர்கள் உட்பட, அனைத்து பணியாளர்களுக்கும், ஓட்டுப்போட ஏதுவாக, ஊதியத்துடன் கூடிய விடுப்பு வழங்க வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.