பாரதியார் பல்கலை நாக் குழுவின் தர ஆய்வுக்கு பின்பு மீண்டும், ஏ கிரேடு தக்கவைத்துள்ளதாக, துணைவேந்தர் கணபதி தெரிவித்தார். கடந்த வாரம், தேசிய தர மதிப்பீடு மற்றும் தர நிர்ணயக் குழு (நாக்) பாரதியார் பல்கலையில் ஆய்வுகளை மேற்கொண்டது. இக்குழு, கடந்த, 2010ல் ஆய்வுகள் மேற்கொண்டு, 3.02 புள்ளிகளுடன் ஏ கிரேடு வழங்கியது. தற்போது நடந்த, ஆய்வுகளில், மூன்றாம் சுற்று ஆய்வில், 3.11 புள்ளிகளுடன் ஏ கிரேடு தக்கவைத்துள்ளது.
இக்குழு, பல்கலை பாடத்திட்டம், தேர்வு முறை, ஆராய்ச்சிகள், உள்கட்டமைப்பு வசதி, மாணவர்கள் பாதுகாப்பு, பல்கலை நிர்வாக நடைமுறைகள் உள்ளிட்ட அனைத்தும் ஆய்வு செய்து, புள்ளிகள் வாயிலாக மதிப்பிட்டு, கிரேடு அந்தஸ்து வழங்குகிறது.
துணைவேந்தர் கணபதி கூறியதாவது:
மாநிலத்தின் சிறந்த பல்கலையாக மேம்படுத்த, பேராசிரியர்களுக்கு பயிற்சி, ஆராய்ச்சிக்கு முக்கியத்துவம், கட்டமைப்பு மேம்பாடு போன்ற செயல்பாடுகள் மேற்கொள்ளப்படும். ஆராய்ச்சிக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில், 40 இளம் பேராசிரியர்களின் முதல்நிலை ஆராய்ச்சிகளுக்கு, தலா ஒரு லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
பல்கலை மானியக்குழு மூலம், சூரிய ஆற்றல் திட்ட பணிகளுக்கு, 5 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இதுவரை, இப்பல்கலை மூலம், 3000 சர்வதேச தரத்தில் ஆராய்ச்சி கட்டுரைகள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. பல்கலையில், ஆராய்ச்சி மாணவர்களுக்கும், மாணவிகளுக்கும் இரண்டு விடுதிகள் கட்டப்பட்டு வருகிறது. கடந்த காலங்களில் நடந்த முறைகேடுகள் கவனத்தில் எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது.
இதற்கு, உரிய விசாரணை மேற்கொள்ளப்படுவதுடன் மீண்டும் முறைகேடுகள் நடக்காத வகையில் நிர்வாக செயல்பாடுகள் இருக்கும். இவ்வாறு, கணபதி கூறினார்.
No comments:
Post a Comment