Pages

Thursday, April 28, 2016

ஆந்திர அரசு ஊழியர்களுக்குஅடிக்குது 'லக்கி பிரைஸ்'

ஆந்திர மாநிலத்தின் புதிய தலைநகர் நிர்மாணிக்கப்பட்டு வரும் அமராவதியில் பணியாற்றும் தலைமைச் செயலக ஊழியர்களுக்கு, வாரத்தில், ஐந்து நாள் வேலை, 30 சதவீத கூடுதல் வீட்டு வாடகைப்படி உள்ளிட்ட சலுகைகளை அளிக்க, அம்மாநில அரசு திட்டமிட்டுள்ளது.


ஆந்திராவிலிருந்து, தெலுங்கானா மாநிலம் பிரிக்கப்பட்டதை அடுத்து, ஆந்திராவின் புதிய தலைநகர், அமராவதியில் நிர்மாணிக்கப்பட்டு வருகிறது. தற்போதே அங்கு, தற்காலிக தலைமைச் செயலக அலுவலகம் துவக்கப்பட்டுள்ளது. 

தலைமைச் செயலக ஊழியர்களுக்காக, 5,000 வீடுகள் கட்டப்படுவதாக, ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு அறிவித்துள்ளார். மேலும், தற்காலிக தலைமைச் செயலகத்தில் பணியாற்றும் ஊழியர்களுக்கு, வாரத்தில் ஐந்து நாள் வேலை, 30 சதவீதம் கூடுதலாக, வீட்டு வாடகைப்படி உள்ளிட்ட சலுகைகளை அளிக்கவும், முதல்வர் ஒப்புதல் அளித்துள்ளார்

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.