Pages

Saturday, April 30, 2016

தொடக்க,நடுநிலைப்பள்ளிகள் செய்ய வேண்டியது கோடை விடுமுறை நாளை முதல் தொடங்குவதால் தலைமை ஆசிரியர்கள் செய்ய வேண்டியது

கோடை விடுமுறை நாளை முதல் தொடங்குவதால் மற்றும் தேர்தல்  சமயம் என்பதாலும் பெரும்பாலான பள்ளிகளில் உள்ள முக்கிய பொருட்களின் பாதுகாப்பை உறுதி படுத்த வேண்டும்.

**ABL வகுப்பறையில் உள்ள பொருட்களை சரியாக அடுக்கி அதன் பாதுகாப்புக்கு உறுதி செய்திடல் வேண்டும்.

**பள்ளியில் உள்ள கழிவறையை சுத்தம் செய்து தேர்தல் பணியில் ஈடுபடுபவர்கள்  பயன் படுத்தும் படி செய்திடல் வேண்டும்.


**தேர்தல் நாளில் பணிக்கு வரும் ஆசிரியர்கள் சிரமம் பாராமல் அவர்கள் படுத்து உறங்க அவர்களுக்கு தேவையான போர்வை அல்லது பாய் போன்றவற்றை பள்ளியில் பணிபுரியும் துப்புரவாளர் அல்லது watchmen கொண்டு வழங்க வேண்டும்.

**பள்ளியில் உள்ள தளவாட சாமான்கள் விவரத்தினை தலைமை ஆசிரியர்கள் குறிப்பு எடுத்து கொள்ள வேண்டும் 2 நகல்களை வைத்துக் கொள்ள வேண்டும். ஒன்றை சாவி யாரிடம் ஒப்படைப்பு செய்கிறிர்களோ அவர்களிடம் சான்றொப்பம் வாங்கி வைத்துக் கொள்ளவும்.

**பள்ளிகளில் உள்ள கதவு சன்னல் ஆகியவற்றை சரியாக பூட்ட வேண்டும்.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.