Pages

Monday, April 11, 2016

கல்லூரி மாணவர்கள் உருவாக்கிய "ஸ்மார்ட் ரேஷன் கார்டு'

"ஸ்மார்ட் ரேஷன் கார்டு' என்னும் புதிய முயற்சியை சென்னை ராமாபுரத்திலுள்ள ஈஸ்வரி பொறியியல் கல்லூரி மாணவர்கள் தொடங்கியுள்ளனர். இதுகுறித்து கல்லூரியின் கணினி அறிவியல் துறையின் தலைவர் டாக்டர் கே.எம். ஆனந்த்குமார் கூறியதாவது:


ரேஷன் பொருட்களை விநியோகம் செய்வதில் உள்ள குளறுபடிகள், பிரச்னைகளை நீக்கும் விதமாக இந்த புதிய "ஸ்மார்ட் ரேஷன் கார்டு' திட்டத்தை எங்கள் மாணவர்கள் உருவாக்கியுள்ளனர்.

 வங்கி கிரெடிட் கார்டைப் போலவே இந்தக் கார்டில் பயனாளரின் பெயர் உள்ளிட்ட விவரங்கள் இடம்பெறும். இதைக் கொண்டு சென்று ரேஷன் கடைகளில் கொடுக்கும்போது அந்தந்த பொருட்கள் அவர்களுக்கு மட்டுமே கிடைக்கும்படி செய்யலாம். அவர் பெயரில் வேறு யாரும் பொருட்களை வாங்க முடியாது. இந்தப் புதிய திட்டம் நுகர்வோருக்கு உதவும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. எந்தத் தவறும் நிகழாது. வேறு யாரும் பொருட்களை வாங்க முடியாது. நுகர்வோருக்கும் நேரம் காலம் மீதமாகும் போன்ற நல்ல விஷயங்கள் இதில் உள்ளன.
 சமூகத்துக்குப் பயன்படும் வகையில் இந்தத் திட்டத்தை எங்களது பிரிவு மாணவர்கள் கார்த்திகேயன், கிரண் ராஜ், ஆனந்தன் ஆகியோர் உருவாக்கியுள்ளனர்.
 கல்லூரியின் தலைவர் டாக்டர் ஆர். சிவக்குமார், முதல்வர் டாக்டர் கே.எஸ். சீனிவாசன் ஆகியோரது வழிகாட்டுதலின் பேரில் திட்டத்தை உருவாக்கியுள்ளோம். 
 தமிழக அரசு இந்தத் திட்டத்தை எடுத்துச் செயல்படுத்தும்போது மிகவும் பயனுள்ளதாக இருக்கும். சமுதாயத்துக்குத் தேவையான மிகவும் அவசியமான திட்டமாகும் இது.என்றார் அவர்.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.