Pages

Friday, April 1, 2016

"கோக், பெப்சி பானங்களைவிட பதநீர் ஆரோக்கியமானது'

கோக், பெப்சி உள்ளிட்ட குளிர்பானங்களைவிட பதநீர் ஆரோக்கியமானது என, கீழ்பவானி விவசாய நலச் சங்க தலைவர் செ.நல்லசாமி தெரிவித்தார். இதுகுறித்து அவர் கூறியதாவது: சுதந்திரம் பெறும்போது தமிழகத்தில் 50 கோடி பனை மரங்கள் இருந்தன. ஆனால், தற்போது, 5 கோடி பனை மரங்களே உள்ளன. அதோடு, பனைமரங்களிலிருந்து பெறப்படும் கருப்பட்டி, பதநீர், நுங்கு உள்ளிட்ட பல்வேறு பொருள்கள் மிகுந்த பலனளிக்கக் கூடியது.
பனை மரங்கள் உள்ள இடங்களில் நீர்வளம் அதிகளவில் இருக்கும். ஆனால், தற்போது பனை மரங்கள் அழிந்து வருகிறது. எனவே, தமிழ் மண்ணின் அடையாளமான பனை மரங்களை அதிகரிக்கச் செய்ய வேண்டும். மேலும், கள் இறக்குவதை நடைமுறைப்படுத்த வேண்டும். அதன் மூலம், கிடைக்கும் பொருள்களை ஏற்றுமதி செய்ய வேண்டும். எனவே, நீர்வளத்தை சூறையாடும் கோக், பெப்சி பானங்களுக்குத் தடை விதித்து, பதநீரை விற்பனை செய்ய அரசு முன்வர வேண்டும் என்றார்.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.