Pages

Wednesday, April 13, 2016

சர்க்கரை நோயாளிகளுக்கு ஊசி மருந்து: இனி வாரம் 1 முறையே போதும்

சர்க்கரை நோயாளிகள் இனி வாரத்துக்கு ஒருமுறை ஊசி மருந்து போட்டுக் கொண்டால் போதும்.  இந்த மருந்தை "எலி லில்லி' என்ற அமெரிக்க நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக நிறுவனத்தின் இந்தியத் தலைவர் எட்கார்ட் ஒலாய்úஸாலா, மருத்துவ இயக்குநர் டாக்டர் தருண் புரி ஆகியோர் சென்னையில் செய்தியாளர்களிடம் செவ்வாய்க்கிழமை கூறியது:


 "ட்ருலிசிட்டி' என்று பெயரிடப்பட்டுள்ள ஊசி மருந்தை டைப்- 2 வகை சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டோர் வாரத்துக்கு ஒருமுறை செலுத்தினால் போதுமானது. பேனா போன்று வடிவமைக்கப்பட்டுள்ள இந்த ஊசியை நோயாளிகளால் எளிதில் உபயோகப்படுத்த முடியும். உடலில் ஹார்மோனைப் போன்று செயலாற்றி, உணவுக்குப் பின்பு உடலில் இருந்து இன்சுலினை தானாகவே சுரக்கச் செய்யும். இதனால், ரத்தத்தில் சர்க்கரையின் அளவு குறையும். 
 இந்தியா, சீனா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகளில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள மருந்தை சர்க்கரை நோய் நிபுணரின் பரிந்துரையின் பேரில் எடுத்துக் கொள்ள வேண்டும். உணவு, உடற்பயிற்சிக்கு உடன் இணைப்பாக மருந்து செயல்படும் என்றனர்.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.