Pages

Friday, April 1, 2016

பிளஸ் 1, 9ம் வகுப்பு தேர்ச்சி முடிவு; ஆசிரியர்களுக்கு ஆலோசனை

நெத்திமேடு செயின்ட் ஜோசப் மேல்நிலைப்பள்ளியில், தேர்ச்சி முடிவு வெளியிடுவது குறித்து, தலைமை ஆசிரியர்கள் ஆலோசனை கூட்டம் நடந்தது. சேலம் மாவட்டத்தில், 267 அரசு மற்றும் உதவி பெறும் உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகள் உள்ளன. அதில் படிக்கும் மாணவர்களில், 9 மற்றும் பிளஸ் 1 வகுப்புகளுக்கு தேர்ச்சி முடிவு வெளியிடுவது குறித்த ஆலோசனைக் கூட்டம் நேற்று, சேலம் நெத்திமேடு செயின்ட் ஜோசப் மேல்நிலைப் பள்ளியில் நடந்தது. மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் ஞானகவுரி, 9 மற்றும் பிளஸ் 1 வகுப்புகளுக்கு தேர்ச்சி முடிவுகள் வெளியிடுவது குறித்த ஆலோசனை வழங்கினார். 


மேலும், 2016-17ம் ஆண்டில், மாணவர் சேர்க்கை அதிகரிக்க எடுக்க வேண்டிய நடவடிக்கை, அடுத்த கல்வியாண்டுக்கான செயல்திட்டம் வகுத்தல், ஓட்டுச்சாவடிகளில் அடிப்படை வசதிகள் ஏற்படுத்துதல், பள்ளி வளாகம் மற்றும் கழிப்பறையை, சுத்தமாகவும் சுகாதாரமாகவும் பராமரித்தல், பள்ளி கட்டடங்களில் மராமத்து பணிகள் நடைபெறுவது குறித்த விதிமுறைகளும் விளக்கப்பட்டது. 250க்கும் மேற்பட்ட தலைமை ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.