Pages

Wednesday, March 9, 2016

மின் வாரிய ஊழியர் தேர்வு; இணையதள சேவை துவக்கம்

தமிழ்நாடு மின் வாரியத்தில் புதிய ஊழியர்களை தேர்வு செய்ய, தனி இணைய தள சேவை துவங்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு மின் வாரியம், இளநிலை உதவியாளர், தணிக்கையாளர் உட்பட, 2,175 பணியியிடங்களை நிரப்ப முடிவு செய்துள்ளது. இதற்கு, அண்ணா பல்கலை மூலம் நடத்தப்படும், எழுத்து தேர்வுக்கு விண்ணப்பிக்க, தனி இணையதள முகவரி துவங்கப்பட்டு உள்ளது. 


அதன்படி, பட்டதாரிகள், www.tangedco.directrecruitment.in என்ற இணைய தள முகவரில், மார்ச், 21 வரை விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க முடியாத பட்டதாரிகள், 73395 58405, 73395 58406, 73395 58408 என்ற தொலைபேசி எண்ணில் புகார் தெரிவிக்கலாம்.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.