Pages

Monday, March 14, 2016

மாற்றுத்திறன் மாணவியருக்கு உதவித்தொகை!

அனைவருக்கும் இடைநிலைக்கல்வி திட்டத்தில், 367 மாற்றுத்திறன் மாணவியருக்கு, தலா, 2,000 ரூபாய் வீதம் உதவித்தொகை வழங்கப்படுகிறது. அனைவருக்கும் இடைநிலைக்கல்வி திட்டத்தில், மாற்றுத்திறன் கொண்ட மாணவர்களுக்கான ஒருங்கிணைந்த திட்டத்தில், ஒன்பதாம் வகுப்பு முதல், பிளஸ் 2 வரை படிக்கும் மாற்றுத்திறன் மாணவியர்களுக்கு, உதவித்தொகை வழங்கப்படுகிறது. மாதத்துக்கு 200 வீதம், ஒரு கல்வியாண்டில், பத்து மாதத்துக்கு, 2,000 ரூபாய் உதவித்தொகை வழங்கப்படுகிறது. 


நடப்பு கல்வியாண்டில், இந்த உதவித்தொகைக்கு, சேலம் மாவட்டத்தில், 367 மாணவியர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இம்மாணவியர் நடப்பு கல்வியாண்டில், பத்து மாதங்கள் பள்ளிக்கு வந்ததை உறுதி செய்யும் சான்று, மற்றும் வங்கி கணக்கு எண் விவரங்கள் ஆகியவை தலைமை ஆசிரியர்கள் மூலம் சேகரிக்கப்பட்டுள்ளது. 

மாணவியருக்கான உதவித்தொகை நேரடியாக, அவர்களது வங்கிக்கணக்கில் வரவு வைக்கப்பட உள்ளது. மார்ச், 31ம் தேதிக்குள் இத்தொகையை மாணவியருக்கு வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.