வெளிநாட்டு மாணவர்களின் வருகை குறித்து 24 மணி நேரத்துக்குள் தகவல் தெரிவிக்க வேண்டும் என்று பல்கலை.,களுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
வெளிநாட்டிலிருந்த கல்வி கற்க இந்தியா வரும் மாணவர்களின் விவரங்களை, பல்கலைகளும், கல்வி நிறுவனங்களும் பதிவு செய்யப்பட்ட 24 மணி நேரத்துக்குள், மத்திய அரசுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். இதேபோல், ஹோட்டல்கள், விடுதிகள், மருத்துவமனைகளுக்கு வரும் வெளிநாட்டினர் குறித்து 24 மணி நேரத்தில் அரசுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும்.
ஆவணப்புத்தகத்தில் வெளிநாட்டினரின் பெயர், அவர்களின் நாடு, இந்தியா வந்ததன் நோக்கம், இந்தியாவில் அவர்கள் தங்க திட்டமிட்டிருக்கும் நாட்கள், இங்கு அவர்கள் சந்திக்கும் நபர்களின் விவரங்களைச் சேகரித்து பராமரிக்க வேண்டும் எனவும் மத்திய உள்துறை அமைச்சகத்தின் அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த உத்தரவு, 1955ஆம் ஆண்டு குடியுரிமைச் சட்டத்தின் கீழ் பதிவு செய்துள்ள வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கு பொருந்தாது என்று தனது அறிவிப்பில் மத்திய உள்துறை அமைச்சகம் தெளிவுபடுத்தியுள்ளது.
No comments:
Post a Comment
உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.