Pages

Wednesday, March 16, 2016

ஏழாண்டுக்கு முந்தைய டி.டி.,திருப்பி அனுப்பிய டி.இ.ஓ.,

தனியார் பள்ளிகள் அளித்த வங்கி வரைவோலையை, ஏழு ஆண்டுகள் கழித்து திருப்பி அனுப்பிய கல்வித்துறை, ரொக்கமாக கட்ட உத்தரவிட்டுள்ளது. சென்னையில், 500க்கும் மேற்பட்ட, அரசு உதவிபெறும் பள்ளிகள் உள்ளன. இந்த பள்ளிகளின் ஆசிரியர் நியமனம், அங்கீகாரம் புதுப்பிப்பு, உட்கட்டமைப்பு வசதி ஆய்வு செய்தல், புதிய பாடப்பிரிவுகள் துவங்க அனுமதி போன்ற பல பணிகளுக்கு, மாவட்ட கல்வி அலுவலகங்கள் தான் அதிகார மையங்களாக உள்ளன.
இந்நிலையில், சென்னை கிழக்கு கல்வி மாவட்டத்தில் வினோதமான முறையில் பண வசூல் நடக்கிறது. அதாவது, 2009ல், அனைத்து அரசு உதவிபெறும் பள்ளிகளில் இருந்தும், சில பணிகளுக்கான அனுமதி கட்டணமாக, 500 ரூபாய் முதல், 2,000 ரூபாய் வரை, கல்வித்துறை பெயரில், டி.டி., எனப்படும் வங்கி வரைவோலை பெறப்பட்டது.தற்போது, இந்த டி.டி.,க்கள் அனைத்தும் திடீரென சம்பந்தப்பட்ட பள்ளிகளுக்கு, ஏழு ஆண்டுகளுக்கு பின் திருப்பி அனுப்பப்பட்டுள்ளன. மேலும் இந்த டி.டி.,க்களை வங்கிகளுக்கு சென்று ரத்து செய்து விட்டு, அந்த தொகையை ரொக்கமாக, மாவட்ட கல்வி அலுவலகமான, டி.இ.ஓ., அலுவலகத்தில் வழங்க வாய்மொழி உத்தரவிடப்பட்டுள்ளது. இதனால், பள்ளிகள் அதிர்ச்சி அடைந்துள்ளன.இதுகுறித்து, பள்ளி நிர்வாகிகள் சிலர் கூறியதாவது:இந்த டி.டி.,க்கள், ஆறு மாதம் மட்டுமே செல்லத்தக்கது; தற்போது, அவை செல்லாதவை. அலுவலக கணக்குக்கும், இந்த டி.டி.,க்கும் எந்த தொடர்புமில்லை என தெரிகிறது.ஏழு ஆண்டுக்கு முந்தைய டி.டி.,யை, எந்த கணக்கும் காட்டாமல் அப்படியே வைத்திருந்து, அதை பணமாக்க முயற்சிக்கின்றனர். இந்த விஷயத்தில், விசாரணை நடத்த வேண்டும். இல்லையென்றால் தேர்தல் கமிஷனிலும், லஞ்ச ஒழிப்பு போலீசிலும் புகார் அளிப்போம்.இவ்வாறு அவர்கள் கூறினர்.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.