Pages

Wednesday, March 30, 2016

ஆங்கிலம் கஷ்டம் மாணவர்கள் கவலை

பத்தாம் வகுப்பு ஆங்கிலம் இரண்டாம் தாள் தேர்வில், ஒரு மதிப்பெண் வினா பகுதி கஷ்டமாக இருந்ததாக, தேர்வெழுதிய மாணவ, மாணவியர் கவலையுடன் கூறினர். பத்தாம் வகுப்பு தேர்வு, கடந்த,15ல் துவங்கியது. நேற்று, ஆங்கிலம் இரண்டாம் தாள் தேர்வு, மாவட்டத்தில் உள்ள, 81 மையங்களில் நடைபெற்றது. விண்ணப்பித்த, 29 ஆயிரத்து, 664 பேரில், 29 ஆயிரத்து, 111 பேர் தேர்வு எழுதினர். 854 தனித்தேர்வரில், 738 பேர் மட்டுமே எழுதினர்.


மாணவ, மாணவியர் கூறியதாவது:

ஒரு மதிப்பெண் வினா பகுதியில், வினாக்கள் கஷ்டமாக இருந்ததால் சரியாக பதில் எழுத முடியவில்லை. கடந்த தேர்வுகளில் கேட்கப்பட்ட வினாக்கள் எதுவும் கேட்கப்படாமல், புதியதாக இருந்தது. ஒரு மதிப்பெண் பகுதி, இவ்வளவு கஷ்டமாக இருக்கும் என நினைக்கவில்லை. ஐந்து மதிப்பெண் வினா பகுதியிலும், புதிதாக, பாடப்புத்தகத்தில் இருந்து உருவாக்கப்பட்ட வினாக்கள், அதிகமாக இருந்தன.

நேரடியான வினாக்களாக இல்லாமல், சுற்றி வளைத்து கேட்கப்பட்ட கேள்விகளால், குழப்பம் ஏற்பட்டது. இதனால், சில வினாக்களுக்கு பதில் எழுத முடியவில்லை. ஆங்கிலம் இரண்டாம் தாள் தேர்வு சிக்கலாக அமையும் என, எதிர்பார்க்கவே இல்லை.இவ்வாறு, அவர்கள் கூறினர்.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.