Pages

Thursday, March 3, 2016

மாணவரிடம் வசூலித்த கட்டணம் திருப்பி வழங்க பள்ளிக்கு உத்தரவு

மாணவரிடம் வசூலித்த கட்டணத்தை, பள்ளி நிர்வாகம் திருப்பி வழங்க வேண்டும் என, மாவட்ட நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவிட்டது. சென்னை தெற்கு மாவட்ட நுகர்வோர் நீதிமன்றத்தில், துாத்துக்குடி மாவட்டம், பூபாலராயபுரத்தை சேர்ந்த பேச்சியப்பன் தாக்கல் செய்த மனு:


சென்னை, ஆயிரம் விளக்கு பகுதியில், ராணி சீதை மன்ற கட்டடத்தில் இயங்கி வரும் தனியார் பள்ளியில், என் மகனை படிக்க வைக்க, 18 ஆயிரத்து, 600 ரூபாய் கட்டணம் செலுத்தினேன். பணி நிமித்தமாக, வேறு ஊருக்கு வீடு மாறி செல்ல வேண்டியிருந்ததால், கட்டணத்தை திரும்ப கேட்டேன். பள்ளி நிர்வாகம் தர மறுத்து விட்டது.

வழக்கறிஞர் மூலம், நோட்டீஸ் அனுப்பியும் கண்டு கொள்ளவில்லை. இதனால், மன உளைச்சலுக்கு ஆளானேன். எனக்கு, இழப்பீடாக, ஒரு லட்சம் ரூபாய்; பள்ளி கட்டணத்தை திருப்பி தருவதுடன், வழக்கு செலவும் வழங்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது. விசாரணையில் பள்ளி நிர்வாகம் சார்பில், யாரும் ஆஜராகவில்லை.

இந்த வழக்கில், நீதிபதி ராமலிங்கம், உறுப்பினர்கள் பால் ராஜசேகரன், அமலா ஆகியோர் இடம் பெற்ற, பெஞ்ச் பிறப்பித்த உத்தரவு: பள்ளி கட்டணம், 18 ஆயிரத்து, 600 ரூபாயை, 2011ல் இருந்து, 9 சதவீத வட்டியுடனும்; வழக்கு செலவாக, 2,500 ரூபாயையும் பள்ளி நிர்வாகம், ஆறு வாரத்திற்குள் வழங்க வேண்டும்.இவ்வாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.