Pages

Monday, March 14, 2016

பின்தங்கிய பள்ளியில் ஆய்வு நடத்த உத்தரவு

கல்வி தரத்தில் பின்தங்கிய துவக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளில், கல்வித்துறை அதிகாரிகள் திடீர் ஆய்வு நடத்த வேண்டும் என, உத்தரவிடப்பட்டுள்ளது.


தொடக்க கல்வித்துறை இயக்குனரகத்தில் இருந்து, முதன்மை கல்வி அலுவலர் (எஸ்.எஸ்.ஏ.,) மற்றும் மாவட்ட தொடக்க கல்வி அலுவலர்களுக்கு அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கை: தமிழகம் முழுவதும் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளிகள் மற்றும் நடுநிலைப்பள்ளிகள் யல்படுகின்றன; அரசு உதவி பெறும் துவக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளும் உள்ளன. இவற்றின் கல்வி தரத்தை மேம்படுத்தும் வகையில், உதவி தொடக்க கல்வி அலுவலர்கள் வாயிலாக ஆய்வு நடத்த வேண்டும்.

உதவி மற்றும் கூடுதல் தொடக்க கல்வி அலுவலர்கள், அறிவியல் மற்றும் நர்சரி உதவி தொடக்க கல்வி அலுவலர்கள், எஸ்.எஸ்.ஏ., ஆசிரிய பயிற்றுனர்கள் குழு அமைத்து, முதன்மை கல்வி அலுவலர், மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் தலைமையில், முன்னறிவிப்பின்றி, பள்ளிகளில் ஆய்வு மேற்கொள்ள வேண்டும்.

தொடர்ந்து புகார் வரும் பள்ளிகள், கல்வி தரத்தில் பின்தங்கிய பள்ளிகளை தேர்வு செய்து, இத்தகைய ஆய்வை நடத்த வேண்டும். ஆசிரியர்கள் குறித்த நேரத்தில் பணிக்கு வருகின்றனரா; பணி நேரம் முழுவதும் பள்ளியில் இருக்கின்றனரா; பாடங்கள் முழுமையாக நடத்தப்படுகிறதா என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.

மாணவர்களின் கல்வி முன்னேற்றம், நூலகம் பயன்பாடு, அரசின் நலத்திட்டங்கள் வழங்கிய விவரம், கழிப்பறை வசதி மற்றும் துப்புரவு பணி, பாதுகாப்பான குடிநீர் போன்றவை ஆய்வு செய்யப்பட வேண்டும். ஆய்வு அறிக்கையை, தொடக்க கல்வி இயக்குனருக்கு அனுப்ப வேண்டும் என, தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.