பல்வேறு பன்னாட்டு நிறுவனங்கள் மூலமாக நடத்தப்பட்ட வளாகத்தேர்வில், நேர்காணலில் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆத்தூர் மாருதி மற்றும் ஸ்ரீ ஜெய மாருதி பாலிடெக்னிக் கல்லூரி மாணவ, மாணவியருக்கு பணி நியமன ஆணை வழங்கும் விழா நடந்தது.
மூன்றாமாண்டு மாணவி விஜயநிலா வரவேற்றார். மாருதி அறக்கட்டளை தலைவர் இளவரசு, செயலாளர் கோவிந்தசாமி ஆகியோர் பேசினர். நிர்வாக இயக்குனர்கள் சுந்தரம், செங்கோட்டுவேல், செல்வம் ஆகியோர் தேர்வு பெற்ற மாணவர்களுக்கு நன்றி தெரிவித்தனர். டாக்டர் இளமுருகன், 488 மாணவர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கினார்.
மாருதி கல்லூரி முதல்வர் தர்மலிங்கம் மற்றும் ஸ்ரீ ஜெயமாருதி பாலிடெக்னிக் கல்லூரி முதல்வர் வெங்கடேசன் ஆகியோர் மாணவர்களை பாராட்டி பேசினர். ஸ்ரீ ஜெய மாருதி பாலிடெக்னிக் கல்லூரி மூன்றாமாண்டு மாணவர் மணிகண்டன் நன்றி கூறினார்.
No comments:
Post a Comment
உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.