2016-2017 நிதி ஆண்டுக்கான நிதிநிலையை, லோக்சபாவில் இன்று நிதி அமைச்சர் அருண்ஜெட்லி தாக்கல் செய்தார். பொது பட்ஜெட் உரையில் கல்வித் துறைக்கான முக்கிய அறிவிப்புகள்:
உலகத்தரத்துக்கு, 10 அரசு கல்வி நிறுவனங்கள் மற்றும் 10 தனியார் கல்வி நிறுவனங்கள் மேம்படுத்தப்படும்.
பள்ளிச் சான்றிதழ்கள் மற்றும் பட்டயப் படிப்புச் சான்றிதழ்கள் டிஜிட்டல் ஆவணங்களாகவும் வழங்கப்படும்.
புதிதாக 62 நவோதயா வித்யாலயா பள்ளிகள் அடுத்த இரண்டு ஆண்டுகளில் தொடங்கப்படும்.
பிரதான் மந்திரி கவுஷல் விகாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் 1500 மல்டி திறன் பயிற்சி நிறுவனங்கள் அமைக்கப் படும்.
உயர் கல்வியை ஊக்குவிக்கும் நோக்கில், முதல் கட்டமாக ரூ.1,000 கோடிக்கு, உயர் கல்வி நிதி முகமை செயல்படுத்தப்படும்.
தொழிற்துறை மற்றும் கல்வித்துறை இணைந்து தேசிய திறன் மேம்பாட்டு வாரியம் சான்றிதழ் அமைக்கப்படும்
தொழில் முனைவு கல்வி மற்றும் பயிற்சியானது, 2,200 கல்லூரிகள், 300 பள்ளிகளுக்கு வழங்கப்படும்.
திறந்த ஆன்லைன் படிப்புகள் மூலம் 50 தொழில் பயிற்சி மையங்கள் தொடங்கப்படும்.
No comments:
Post a Comment
உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.