மாணவர்களின் ஆதார் எண் விவரம் சேகரிக்காத, ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என, கல்வி அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
தமிழகத்தில், அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவர்களின், ஆதார் எண் விவரங்களை சேகரிக்க, பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு ஏற்கனவே உத்தரவிடப்பட்டிருந்தது. ஆதார் எண் உள்ளவர்களிடம், ஆதார் அட்டை நகல் பெறப்பட்டது. அட்டை இல்லாதவர்களுக்கு, சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டன.
இந்த பணிகள் பல இடங்களில் நடந்து முடிந்தாலும், மாணவர்களின் ஆதார் எண் விவரங்களை, பள்ளிக்கல்வி இயக்குனரகத்துக்கு, தலைமை ஆசிரியர்கள் அனுப்பவில்லை. இந்த எண்ணின்படியே, மாணவர்களின் விவரங்கள் கணினியில் சேர்க்கப்பட்டு, அதன்மூலம் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட உள்ளன.
எனவே, கோடை விடுமுறைக்குள் ஆதார் எண் விவரங்களை அனுப்ப வேண்டும். தாமதமானால், ஆசிரியர்கள் மீது, துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என, மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
No comments:
Post a Comment
உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.