Pages

Tuesday, March 15, 2016

தனியார் கல்லூரிகளைக் கண்காணிக்க இணையதளம்

தனியார் கல்லூரிகளின் உள்கட்டமைப்பு வசதிகளை கண்காணிப்பதற்கு இணையதளம் ஒன்றை மத்திய அரசு துவங்கியுள்ளது என மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி லோக்சபாவில் தெரிவித்தார்.

லோக்சபாவில் நடந்த விவாதத்தில் மத்திய மனித வள மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி பேசியதாவது: தனியார் கல்லூரிகளின் தரத்தை உறுதி செய்வதற்காக, கல்லூரிகளின் நிர்வாகத்தினரிடம் தொடர்ந்து ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது. தனியார் கல்லூரிகளில் தொடர்ச்சியாக ஆய்வும் நடத்தப்பட்டு வருகிறது.


தனியார் கல்லூரிகளின் அடிப்படைக் கட்டமைப்பு வசதிகளை கண்காணிக்க, know your college எனும் பெயரில் இணையதளம் துவங்கப்பட்டுள்ளது. அதில் மாணவர்கள் கல்லுாரியின் உள்கட்டமைப்பு வசதிகளை தெரிந்து கொள்ளலாம். அதில், குறிப்பிடப்பட்டுள்ள தகவல்களின்படி, கல்லூரிகளில் ஆசிரியர்கள் எண்ணிக்கை, உள்கட்டமைப்பு வசதிகளில் குறைபாடுகள் இருந்தால், அந்த இணையதளம் வாயிலாக புகார் கொடுக்கலாம். இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.