Pages

Wednesday, March 2, 2016

கல்வித்துறை நிலம் மாயம்; இயக்குனர் ஆய்வு

கல்வித்துறைக்குச் சொந்தமான நிலம் காணாமல் போனது குறித்து,கல்வித்துறை இயக்குனர் நேற்று ஆய்வு நடந்தினார். பழைய மூணாறில் கல்வித்துறைக்குச் சொந்தமாக 73 சென்ட் நிலம் இருந்தது. இந்த இடத்தில் தேசிய ஆசிரியர்கள் நல அறக்கட்டளை சார்பில்,ரூ.3.5 கோடியில் கல்வித்துறைக்குத் தேவையான வகையில் மூன்று மாடி கட்டடம் கட்டப்பட்டது. இதற்கான பணிகள் கடந்த 2011 மார்ச் 27ல், தொடங்கியது. அப்போது நடத்தப்பட்ட சர்வேயில், 45 சென்ட் மட்டும் காணப்பட்டது. 


கல்வித்துறைக்குச் சொந்தமான நிலத்தை அருகில் உள்ள தனியார் தங்கும் விடுதியினர் ஆக்கிரமித்ததாக புகார் எழுந்தது. இந்நிலையில் தூண்கள் கான்கிரீட் செய்யப்பட்ட நிலையில், கட்டுமான பணிகள் கைவிடப்பட்டன.


ஆய்வு

நிலம் காணாமல் போனது குறித்து, பொது கல்வித்துறை இயக்குனர் அலுவலக கண்காணிப்பாளர் சுதாகரன் மற்றும் தேவிகுளம் சர்வே அதிகாரி பினு பிப். 12ல்,ஆய்வு நடத்தினர். இதன் அறிக்கையை கல்வித்துறை இயக்குனர் ஜெயாவிடம் தாக்கல் செய்தனர். அதன்படி இவர் நேற்று நிலம் காணாமல் போனதைக் குறித்து, நேரில் ஆய்வு நடத்தினார். தேவிகுளம் ஆர்.டி.ஓ., ஷபின்சமீர், ஆசிரியர்கள் நல அறக்கட்டளை உறுப்பினர்கள் அப்துல் ஆஷிஸ், செரியாக் உடன் இருந்தனர்.

நிலம் காணாமல் போனதாக தெரியவந்துள்ளதாகவும், இதன் அறிக்கை அரசுக்கு தாக்கல் செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், கைவிடப்பட்ட கட்டுமான பணிகள் மீண்டும் துவங்கப்பட்டு, வரும் டிசம்பர் 31ம் தேதிக்குள் பணிகள் பூர்த்தி செய்யப்படும் என இயக்குனர் ஜெயா தெரிவித்தார்.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.