Pages

Saturday, March 26, 2016

செவிலிய பட்டயப்படிப்பு தேர்வுக்கு விண்ணப்பிக்க ஏப்ரல் 7 கடைசி

 செவிலிய பட்டயப் படிப்புக்கான பருவத் தேர்வுகளுக்கு விண்ணப்பிக்க ஏப்ரல் 7-ஆம் தேதி கடைசித் தேதியாகும்.செவிலியப் பட்டயப் படிப்புக்கான ஜூலை-ஆகஸ்ட் 2016 பருவத் தேர்வுகளை எழுதும் மாணவர்களின் விண்ணப்பம், தேர்வுகளை நடத்தும் தகுதியுள்ள ஆசிரியர்களின் விண்ணப்பங்கள் ஆகியவற்றை அந்த பயிற்சிப் பள்ளிகள் சமர்ப்பிக்க வேண்டும். தேர்வுக்காக ஒவ்வொரு பாடத்துக்கும் ரூ. 100 தேர்வுக் கட்டணமாக செலுத்த வேண்டும்.

தேர்வுக் கட்டணத்தை சென்னையில் செல்லத்தக்கதான வரைவோலை மூலம் செலுத்த வேண்டும்.தேர்வுக் கட்டணம், தேர்வுக்கான விண்ணப்பங்களை தலைவர், செவிலிய பட்டயப் படிப்புக்கான தேர்வு வாரியம், மருத்துவக் கல்வி இயக்ககம், கீழ்ப்பாக்கம், சென்னை- 10 என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும்.  மேலும் விவரங்களுக்கு www.tnhealth.org என்ற இணையதள முகவரியைத் தொடர்புகொள்ளலாம்.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.