Pages

Tuesday, March 15, 2016

7ம் வகுப்பு மாணவன் பலி; சக மாணவன் தள்ளியதால் விபரீதம்

வகுப்பறையில் சக மாணவன் தள்ளியதில், கீழே விழுந்த மாணவன், சிகிச்சை பலனின்றி இறந்தார்.  விழுப்புரம் மாவட்டம், சின்னசேலம் அடுத்த பூண்டி கிராமத்தை சேர்ந்தவர், அன்பரசு மகன் பாலமுருகன், 12; அம்மையகரத்தில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளியில், 7ம் வகுப்பு படித்து வந்தார். நேற்று காலை, 10:30 மணிக்கு, பள்ளியில் இரண்டாம் பாடவேளை ஆசிரியர் வருவதற்குள், பாலமுருகன், சக மாணவரை மற்றொரு மாணவன் மீது தள்ளி விட்டுள்ளார். 


ஆத்திரமடைந்த மாணவன், பாலமுருகனின் முகத்தில் தாக்கி, கழுத்தைப் பிடித்து கீழே தள்ளியுள்ளார். இதில், பாலமுருகனின் பின் மண்டை பெஞ்சில் மோதியதில், மயங்கி விழுந்தார்.

தகவலறிந்த தலைமை ஆசிரியை கவுசல்யா மற்றும் ஆசிரியர்கள், பாலமுருகனை, சின்ன சேலத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கிருந்து, மேல் சிகிச்சைக்காக, கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு செல்லும் வழியில் பாலமுருகன் இறந்தார். கள்ளக்குறிச்சி கல்வித்துறை அதிகாரிகள் மற்றும் போலீசார், பள்ளிக்கு சென்று விசாரணை நடத்தினர்.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.