Pages

Thursday, March 17, 2016

4 தேர்வுகள் முடிந்த நிலையில் 3 மாணவர்களுக்கு ஹால் டிக்கெட்?

தஞ்சையில், பிளஸ் 2 தேர்வு தொடங்கி நான்கு தேர்வுகள் முடிந்த நிலையில், அவசர கதியில், மூன்று மாணவர்களுக்கு, அரசு பள்ளி ஹால் டிக்கெட் வழங்கியுள்ளது. நுாறு சதவீதம் தேர்ச்சிக்காக நடத்திய நாடகம் அம்பலமானதால் ஹால் டிக்கெட் வழங்கப்பட்டுள்ளது. தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை அரசினர் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில், பிளஸ் 2வில், மொத்தம், 407 மாணவர்கள் படித்து வந்தனர்.


அனுமதிக்கவில்லை

இவர்களில், 16 மாணவர்கள் தேர்ச்சி பெற மாட்டார்கள் என அறிந்த பள்ளி தலைமையாசிரியர், பள்ளியின், 100 சதவீத தேர்ச்சியை காட்ட வேண்டும் என்ற நோக்கத்தில், இந்த, 16 மாணவர்களுக்கு பொது தேர்வு ஹால் டிக்கெட் வழங்கவில்லை என கூறப்படுகிறது.

பிளஸ் 2 பொதுத் தேர்வு, கடந்த 4ம் தேதி தொடங்கி தற்போது தமிழ், ஆங்கிலம் மற்றும் வேதியியல் பாடங்களுக்கான தேர்வுகள் நடைபெற்றுள்ளன. செயல்முறைத் தேர்வுகள் ஏற்கனவே நடைபெற்று முடிந்து விட்டன.கடிதம் வாங்கினர் இந்நிலையில், தேர்வு எழுத அனுமதிக்கவில்லை என்கிற செய்தி கசிய ஆரம்பித்த நிலையில், 16 மாணவர்களில் மூன்று மாணவர்களை மட்டும் தஞ்சை சி.இ.ஓ., அலுவலகத்திற்கு, கடந்த 12ம் தேதி மாலை வர சொல்லி, ஹால் டிக்கெட் வழங்கப்பட்டுள்ளது. அந்த மாணவர்களிடம், தேர்வு எழுத சம்மதம் என கடிதம் ஒன்றையும் எழுதி வாங்கி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

பெற்றோர் ஒருவர் கூறியதாவது:

தேர்வுக்கான ஹால் டிக்கெட் வழங்கப்படுவதை கேட்டு, வகுப்பாசிரியரை சந்தித்தேன். அப்போது, அவர் என்னை கடுமையான வார்த்தைகளால் திட்டினார். என் மகன் படிக்க லாயக்கற்றவன், தேர்வு எழுதினால் தேர்ச்சியடைய மாட்டான்; அவனை இனிமேல் பள்ளிக்கு அனுப்ப வேண்டாம். அவனை வேலைக்கு அனுப்பினால் வீட்டுக்கு வருமானம் கிடைக்கும் என கூறி தலைமையாசிரியரை சந்திக்க சொன்னார். 

தலைமையாசிரியரை சென்று சந்தித்தபோது அவரும் கடுமையான சொற்களால் திட்டி ஹால் டிக்கெட் தரமறுத்து விட்டார். இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.