Pages

Tuesday, March 8, 2016

உதவி பேராசிரியர் பணியிடம்; 15ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்

மத்திய அரசு கல்லுாரிகளில், 170 உதவி பேராசிரியர் பணிகளுக்கு, 15ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். மத்திய அரசு பணியாளர் தேர்வாணைய செய்திக்குறிப்பு: மத்திய அரசு கல்லுாரிகளில், தாவரவியல் பாடத்தில், 16 உதவி பேராசிரியர்கள், வேதியியலில், 20 பேர், பொருளாதாரத்தில், 20 பேர், ஆங்கிலத்தில், 29, கணிதத்தில், 15, இயற்பியலில், 17, வரலாறு, எட்டு, தமிழ் உதவி பேராசிரியர், நான்கு உட்பட பல பாடப் பிரிவுகளுக்கு, 170 உதவி பேராசிரியர்கள் நியமிக்கப்படுகின்றனர்.


விண்ணப்பதாரர்கள், 35 வயதிற்குள் இருக்க வேண்டும். பாடப்பிரிவில், 55 சதவீதம் மதிப்பெண் பெற்று, நெட் அல்லது செட் தேர்வுகளில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். http://www.upsconline.nic.in என்ற இணையதளத்தில் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை பிரின்ட் எடுத்து, வரும், 15ம் தேதிக்குள், தி கமிஷனர், யூனியன் பப்ளிக் சர்வீஸ் கமிஷன், டோல்பூர் ஹவுஸ், சாஜஹான் ரோடு, புதுடில்லி- - 110069 என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.