Pages

Tuesday, March 1, 2016

சி.பி.எஸ்.இ. 12-வது வகுப்பு தேர்வு இன்று தொடங்குகிறது

மத்திய கல்வி வாரியமான சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்தின் கீழ் உள்ள பள்ளிகளில் 12-வது வகுப்பு மற்றும் 10-வது வகுப்பு தேர்வுகள் இன்று (செவ்வாய்க்கிழமை) தொடங்குகின்றன. ஆங்கில பரீட்சையுடன் தொடங்கும் 12-வது வகுப்பு தேர்வு ஏப்ரல் 22-ந்தேதி வரை நடக்கிறது. 12-வது வகுப்பு தேர்வை 10 லட்சத்து 67 ஆயிரத்து 900 மாணவ-மாணவிகள் எழுதுகிறார்கள்.


10-வது வகுப்பு தேர்வு இன்று டைனமிக் ரீடெய்ல் என்ற பாடத்துடன் தொடங்கி மார்ச் 28-ந்தேதி முடிவடைகிறது. இந்த தேர்வை 14 லட்சத்து 99 ஆயிரத்து 122 பேர் எழுதுகிறார்கள்.

தமிழ்நாடு, புதுச்சேரி, ஆந்திரா, மராட்டியம், கர்நாடகம், அந்தமான் - நிக்கோபார், கோவா அடங்கிய சென்னை மண்டலத்தில் 12-வது வகுப்பு தேர்வை 56 ஆயிரத்து 948 பேர் எழுதுகிறார்கள். 10-வது வகுப்பு தேர்வை 1 லட்சத்து 62 ஆயிரத்து 309 பேர் எழுதுகிறார்கள். மாணவர்கள் அவர்கள் படித்த பள்ளிக்கூடத்தில் தேர்வு எழுத முடியாது. அவர்கள் வேறு பள்ளியில் தான் தேர்வு எழுத வேண்டும்.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.