Pages

Wednesday, March 9, 2016

10ம் வகுப்பு முகப்பு தாளில் பிழை!

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு விடைத்தாளில், தைக்கப்பட்டுள்ள முகப்பு சீட்டில், ஒரு சில மாணவர்களின் விவரங்களில் பிழை இருந்ததால், தலைமை ஆசிரியர்கள் குழப்பம் அடைந்தனர். இந்நிலையில், அவற்றை திருத்துவதற்கான வழிமுறைகள் குறித்து விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.


விடைத்தாள்கள்

தமிழகத்தில பிளஸ் 2 மற்றும், 10ம் வகுப்பு பொதுத்தேர்வுக்கான, பெயர் பட்டியல் தயாரிப்பு, ஹால் டிக்கெட் வழங்கல் உள்ளிட்ட அனைத்து பணிகளும், ஆன்லைன் மூலமாகவே நடக்கிறது. அதே போல், மாணவர்கள் தேர்வெழுதும் விடைத்தாளின் முகப்பு சீட்டில், அவர்களது பெயர், விவரம் அச்சிடப்பட்டு, தைக்கப்படுகிறது.

இந்த முகப்பு சீட்டும், தேர்வுத் துறை இணையதளத்தின் வாயிலாக பதிவிறக்கம் செய்யப்படுகிறது. அதில், ஒரு சில மாணவர்களின் பெயர் மற்றும் புகைப்படம் உள்ளிட்டவற்றில் ஏற்பட்ட பிழைகளை திருத்தம் செய்வதில், சிக்கல் ஏற்பட்டது. இதற்கான விளக்க அறிக்கையை தேர்வுத் துறை, அனைத்து தேர்வு மையங்களுக்கும் அனுப்பி வைத்துள்ளது. அதில், முகப்பு தாளில், மீடியம் தவறாக இருத்தல், பெயர், பாலினம் தவறாக இருத்தல், பார்கோடு சேதம் அடைந்திருந்தல், பாடக்குறியீட்டு எண் மாற்றம், புகைப்படம் மாறியிருத்தல் உள்ளிட்ட பிழைகளை திருத்தும் வழிமுறையும், அதற்காக எடுக்க வேண்டிய நடைமுறைகளும் விளக்கமாக வழங்கப்பட்டுள்ளன.

ஹால் டிக்கெட்

பிழைகளுக்காக மாணவர்களை தேர்வெழுதுவதை தடுக்காமல், தேர்வு மையத்தின் பெயர், நுழைவுச்சீட்டு மற்றும் சீட்டிங் பிளான் அடிப்படையில், மாணவர்களை தேர்வெழுத அனுமதிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது. ஹால்டிக்கெட் இல்லையென்றால் மட்டுமே, தேர்வெழுத அனுமதி கிடையாது.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.