Pages

Friday, March 18, 2016

போனஸ் மதிப்பெண் உண்டா?10ம் வகுப்பு தமிழ் 2ம் தாளில் பிழை


பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில், தமிழ், இரண்டாம் தாளில் பிழையாகவும், பாடத்திட்டத்துக்கு வெளியில் இருந்தும் கேள்விகள் இடம் பெற்றதால், போனஸ் மதிப்பெண் வழங்கும்படி கோரிக்கை எழுந்துள்ளது. பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில், தமிழ், இரண்டாம் தாளுக்கு, நேற்று முன்தினம் தேர்வு நடந்தது. மொத்தம், 100 மதிப்பெண்களுக்கு, 41 கேள்விகள் இடம் பெற்று இருந்தன.

இதில், ஐந்து கேள்விகள், மாணவர்களை குழப்பும் வகையில் இருந்தன
ஒரு கேள்வியே தவறாக இருந்தது
ஒரு கேள்வியில், பாட புத்தகத்துக்கு வெளியில் உள்ள அம்சங்கள் இடம் பிடித்திருந்தன
ஒரு மதிப்பெண்ணுக்கான, 12வது கேள்வி, உவமையை உருவகமாக மாற்றுமாறு கொடுக்கப்பட்டிருந்தது. அதில், 'விழி கயல்' என்ற வார்த்தை இடம் பெற்றிருந்தது. ஆனால், 'விழி கயல்' என்ற வார்த்தையே உருவகம் தான் என்பதால், மாணவர்கள் குழப்பம் அடைந்தனர்.
பாடத்திட்டப்படி, 'கயல்விழி' என்று உவமை கொடுக்கப்பட்டு, 'விழி கயல்' என உருவகமாக மாற்றி எழுத வேண்டும். எனவே, இந்த கேள்விக்கு, ஒரு மதிப்பெண் போனஸ் வழங்க கோரிக்கை எழுந்துள்ளது
தொடர்ந்து, 34வது கேள்வி, பிறமொழி சொல்லை தமிழாக்கம் செய்வதாக அமைந்திருந்தது. அந்த கேள்வியில், 'அவுட் கோயிங் - outgoing' என்ற வார்த்தை இடம் பெற்று இருந்தது. இந்த வார்த்தைக்கான தமிழாக்கம் தெரியாமல், ஆசிரியர்களே தவித்து வருகின்றனர்
அதேபோல், 36வது கேள்வியில், எட்டு வரியில் புதுக்கவிதை எழுத, 'இயற்கையும், வானமும்' என்ற தலைப்பு கொடுக்கப்பட்டது. ஆனால், பாட புத்தகத்தில், 'பள்ளி, குழந்தை, நட்பு, மழை' ஆகிய தலைப்புகளில் தான் கவிதை எழுத பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது

இதேபோல், 37வது கேள்வியில், 'பாநயம் பாராட்டல்' என்ற கேள்விக்கு, ஐந்து மதிப்பெண்ணே குறிக்கப்பட்டு இருந்தது. இதே கேள்வி, பிளஸ் 2 தேர்வில், 10 மதிப்பெண் பிரிவில் இடம் பெற்றுள்ளது மேலும், 41வது கேள்வியில், 'பொதுக்கட்டுரை வரைக' என்ற,
10 மதிப்பெண் கேள்வியில், 'கணினி' மற்றும் 'நான் விரும்பும் கவிஞன்' என்ற தலைப்பு கொடுக்கப்பட்டிருந்தது. 'இந்த, இரு தலைப்புகளும் பாட புத்தகத்தில் இல்லை' என, ஆசிரியர்கள், மாணவர்கள் தெரிவித்தனர்.எனவே, குழப்பமான கேள்விகளுக்கு போனஸ் மதிப்பெண் வழங்க வேண்டும் என, மாணவர்கள், பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.