Pages

Thursday, February 25, 2016

TNPTF - கூடுதல் நிதித்துறை செயலர் மற்றும் நிர்வாகசீர்திருத்தத் துறை அவர்களை சந்தித்து கோரிக்கை குறித்து விவாதித்தனர்.

24.2.2016, இன்று தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க பொறுப்பாளர்கள் மற்றும் தமிழ்நாடு ஆரம்பபப்ள்ளி ஆசிரியர் கூட்டணி மாநிலத் தலைவர் திரு.மோசஸ் ஆகியோர் பணியாளர் மற்றும் நிர்வாகச் சீர்திருத்தத்துறை செயலாளர் திரு.பா.வி.டேவிதார் அவர்களையும் மற்றும் நிதி துறையில் அரசின் கூடுதல் தலைமைச் செயலாளர் திரு. கே.சண்முகம் அவர்களையும் சந்தித்து கோரிக்கைகள் குறித்து விவாதித்தனர்.


இச்சந்திப்பில் முக்கிய துளிகள்:

1.முதல்வர் அறிவித்த அறிவிப்புகளில் எஞ்சியுள்ளவைகளுக்கு ஓரிரு நாளில் அரசாணை வெளியீடு

2. சி.பி.எஸ். திட்டத்தில் ஓய்வு பெற்றவர்கள் மற்றும் இறந்தவர்களுக்கு உடனடியாக பங்கு தொகையுடன், அரசின் பங்கும் சேர்த்து தொகை வழங்கிட அரசாணை இரண்டு நாட்களுக்குள் வெளியிட உறுதி


3. சி.பி.எஸ். திட்டத்தை பழைய ஓய்வூதிய திட்டமாக மாற்ற அமைக்கப்படவுள்ள குழு உறுப்பினர்களின் பட்டியல் விரைவில் வெளியிட உறுதி.

4. இடைநிலை ஆசிரியர்களின் ஊதிய மாற்றம் குறித்து விரிவான ஆலோசனை செய்யப்பட்டு வருவதாகவும் தற்பொழுது உள்ள சூழலில் இயலவில்லையென்றால் 7வது ஊதியக்குழுவில் இக்குறைகள் களையப்படும் வண்ணம் உடனடியாக குழு உறுப்பினர்களை அறிவிப்பது  என உறுதி அளிக்கப்பட்டுள்ளது. இயக்கத்தின் பிரதான கோரிக்கையான இடைநிலை ஆசிரியர்களின் ஊதிய மாற்றத்தில் அதிக கவனம் கொடுக்கப்பட வேண்டும் என நமது சார்பில் அழுத்தம் கொடுக்கப்பட்டுள்ளது.

5.வேலைநிறுத்த நாட்களில் ஊதியம் பிடித்தம் இல்லையெனவும், அதை முறைப்படுத்திடவும் ஆணை வழங்கப்படும் எனவும் உறுதி அளிக்கப்பட்டது

அலைபேசி வழி தகவல்: திரு.ச.மோசஸ், மாநிலத் தலைவர்,
த.நா.ஆ.ப.ஆசிரியர் கூட்டணி

பகிர்வு: திரு.ஆ.முத்துப்பாண்டியன், சிவகங்கை மாவட்டச் செயலாளர்,
த.நா.ஆ.ப.ஆசிரியர் கூட்டணி

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.