பள்ளிக்கல்வி தலைமை அலுவலகங்கள் அமைந்துள்ள, சென்னை, டி.பி.ஐ., வளாகத்தில், கல்வித் துறை ஊழியர் சங்கங்கள் பல்வேறு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளன. தங்களுக்கு வழங்கப்படும் தொகுப்பூதியத்தை, காலமுறை ஊதியமாக மாற்றக்கோரி, பள்ளிக்கல்வி துப்புரவு பணியாளர்கள், 5ம் நாளாக காலவரையற்ற உண்ணாவிரதத்தை மேற்கொண்டுள்ளனர். அடிப்படை ஊதிய முரண்பாட்டை சரி செய்யக்கோரி, இடைநிலை பதிவுமூப்பு ஆசிரியர் சங்கத்தினர், நான்காவது நாளாக தொடர் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இதேபோல், ஆசிரியர் பணி நியமனம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, வேலையில்லா பட்டதாரி கணினி ஆசிரியர் சங்கத்தினர், நேற்று முதல் முற்றுகை போராட்டம் துவக்கி உள்ளனர். இவர்கள் அனைவரும், டி.பி.ஐ., வளாகத்தில் போராட்டம் நடத்தி வரும் நிலையில், பள்ளி ஆசிரியர் சங்கங்களின் கூட்டுக்குழுவான, 'ஜாக்டா' சார்பில் இன்று, பள்ளிக்கல்வி அலுவலக முற்றுகை போராட்டம் நடக்க உள்ளது. இதனால், பள்ளிக்கல்வித் துறை அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். டி.பி.ஐ., வளாகத்தில் போராட்டத்திற்கு தடை விதிப்பது குறித்து ஆலோசித்து வருகின்றனர்.
No comments:
Post a Comment
உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.