Pages

Thursday, February 11, 2016

தேசிய குடற்புழு நீக்க தினம் பள்ளியில் மாணவர்களுக்கு குடற்புழு நீக்க மாத்திரை வழங்கல் விழா

தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் அரசு உதவி பெறும்  நடுநிலைப் பள்ளியில் மாணவர்களுக்கு சுகாதாரத்துறை சார்பில் குடற்புழு நீக்க மாத்திரை வழங்கும் துவக்க விழா நடைபெற்றது. விழாவிற்கு வந்தவர்களை ஆசிரியர் ஸ்ரீதர் வரவேற்றார்.
பள்ளி தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் விழாவிற்கு தலைமை தாங்கினார் .சுகாதாரத்துறை சார்பில்  பள்ளிகள் தோறும் மாணவர்களுக்கு குடற்புழு நீக்க மாத்திரைகள் வழங்கப்பட்டது.மத்தியரசு சார்பில் தேசிய குடற்புழு நீக்க நாளை முன்னிட்டு  சுகாதாரத்துறை சார்பில் பள்ளி மாணவர்களுக்கு ரத்த சோகை ஏற்படுவதை தவிர்க்க குடற்புழு நீக்கத்திற்கான 'அல்பென்டசோல்' மாத்திரை வழங்கப்பட்டது.
5 முதல் 13 வயது வரை உள்ள மாணவ,மாணவியர்க்கு  மாத்திரை வழங்கபட்டது.ரத்த சோகை நோயால் பல்வேறு நோய்கள் ஏற்படுவதை தவிர்ப்பதற்காக இந்த மாத்திரைகள் வழங்கப்படுகிறது. பள்ளியில் உள்ள அனைத்து மாணவர்களுக்கும் வழங்கப்பட்டது.விழா நிறைவாக ஆசிரியை வாசுகி நன்றி கூறினார்.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.