Pages

Wednesday, February 17, 2016

போராட்டம் தொடரும்: ஆசிரியர்கள்

இடைக்கால நிதி நிலை அறிக்கையில் எந்தவித அறிவிப்பையும் தமிழக அரசு வெளியிடாததால், போராட்டம் தொடரும் என்று "ஜாக்டோ' (ஆசிரியர்கள்) அமைப்பினர் தெரிவித்தனர். பழைய ஓய்வூதியத் திட்டம் அமல்படுத்துதல், மத்திய அரசுக்கு இணையான ஊதியம் என்பன உள்ளிட்ட 15 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி, ஆசிரியர்களின் சங்கங்கள் இணைந்து "ஜாக்டோ' வாயிலாகத் தொடர் போராட்டம் நடத்திவருகிறது.


இதன் தொடர்ச்சியாக, ஜன. 30, 31, பிப்.1-ஆம் தேதிகளில் ஜாக்டோ அமைப்பினர் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர். இதைத் தொடர்ந்து, 9-ஆம் தேதி அமைச்சர் குழுவினருடன் மேற்கொண்ட பேச்சு வார்த்தையைத் தொடர்ந்து, இடைக்கால நிதிநிலை அறிவிப்புக்காகக் காத்திருந்தனர்.
 இந்த நிலையில், இடைக்கால நிதிநிலை அறிக்கையில் அறிவிப்பு வெளியாகததால், ஆசிரியர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். இதனால், போராட்டம் தொடரும் என தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் மன்றப் பொதுச் செயலாளர் க.மீனாட்சி சுந்தரம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளார்.
 மேலும், வியாழக்கிழமை கூடும் ஜாக்டோ பொதுக்குழுக் கூட்டத்தில் போராட்டத்தைத் தொடர்வது குறித்து அறிவிக்கப்படும் என்றும் அவர் கூறினார்.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.