Pages

Tuesday, February 16, 2016

"ஆசிரியர் சங்க கூட்டமைப்பு அரசுடன் நடத்திய பேச்சுவார்த்தையில் திருப்தி"

தமிழ்நாடு ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பு (டேக்டோ) சார்பில் அரசுடன் நடத்திய பேச்சுவார்த்தை திருப்திகரமாக அமைந்தது என அந்த அமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளர் பா.ஆரோக்கியதாஸ் கூறியுள்ளார். இதுகுறித்து அவர் ஞாயிற்றுக்கிழமை விடுத்துள்ள செய்திக்குறிப்பு: ஆசிரியர் சங்க கூட்டு இயக்கங்களுடன் (டேக்டோ, ஜாக்டோ) அரசு சார்பில் அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட 5 அமைச்சர்கள் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அதில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி ஆசிரியர்களின் கோரிக்கைகள் தொடர்பாக அமைச்சர்கள் கருத்தைக் கேட்டு ஆலோசனை நடத்தினர். பேச்சுவார்த்தையில் பழைய ஓய்வூதியத் திட்டத்தை செயல்படுத்துதல், 2003-2006 தொகுப்பூதிய காலத்தை பணிக்காலமாக அறிவித்தல், தொடக்கக் கல்வி ஆசிரியர்களுக்கு 10 சதவிகிதம் முதுகலை ஆசிரியர் பதவி உயர்வு உள்ளிட்ட 10 அம்சக் கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன.

இதுகுறித்து முதல்வரின் கவனத்துக்கு எடுத்துச்சென்று நிறைவேற்றுவதாக அமைச்சர்கள் உறுதியளித்தனர். அதன்படி டேக்டோவின் கோரிக்கைகளை நிறைவேற்ற முதல்வர் ஜெயலலிதாவும் உத்தரவிட்டுள்ளார்.

இடைக்கால பட்ஜெட்டிலும் டேக்டோ அமைப்பின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் வகையில் அறிவிப்பு இடம் பெறும் என நம்புகிறோம் எனக் குறிப்பிட்டுள்ளார்.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.