Pages

Friday, February 26, 2016

பிளஸ் 2 பொதுத் தேர்வு: நேர விவரங்கள் அறிவிப்பு

பிளஸ் 2 பொதுத் தேர்வில் மாணவர்கள் கடைப்பிடிக்க வேண்டிய நேர விவரம் குறித்து அறிவிக்கப்பட்டுள்ளன. தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத் தேர்வுகள் மார்ச் 4ஆம் தேதி முதல் தொடங்குகின்றன. மதுரை மாவட்டத்தில் 37 ஆயிரம் மாணவ, மாணவியர் தேர்வெழுதுகின்றனர். இதற்கான வினாத் தாள்கள் 12 மையங்களில் வைக்கப்பட்டு, துப்பாக்கி ஏந்திய போலீஸார் பாதுகாத்து வருகின்றனர்.


தேர்வுகள் காலை 10 மணி முதல் பிற்பகல் 1.15 மணி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. காலை 10 மணிக்குள் மாணவ, மாணவியர் தேர்வு அறையில் இருக்கவேண்டும். சரியாக 10 மணிக்கு வினா, விடைத்தாள்கள் அளிக்கப்படும். 10.10 மணி வரை வினாத்தாளை படிக்கலாம். 10.10 முதல் 10.15 மணி வரை விடைத்தாள் உள்ளிட்டவற்றில் விவரங்களை சரிபார்க்கலாம். அதன்பின்னர், தேர்வை மாணவ, மாணவியர் எழுதத் தொடங்கலாம்.

 மதுரையில் தேர்வறையை கண்காணிக்க, பறக்கும் படைகள் வருவாய்த் துறை அதிகாரிகளுடன் இணைந்து செயல்படும் வகையில் நியமிக்கப்பட்டுள்ளன. தேர்வறைக்குள் மாணவர்கள் செயல்படும் விதம் குறித்து, அவர்களுக்கு அறிவுறுத்தும் பணியில் ஆசிரியர்கள் ஈடுபட்டுள்ளனர்.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.