தமிழ்நாடு உடற்கல்வியியல் மற்றும் விளையாட்டுப் பல்கலையின், ஒன்பதாவது பட்டமளிப்பு விழா, சென்னை ராஜ்பவனில் நேற்று நடந்தது. இதில், 161 மாணவ, மாணவியருக்கு, கவர்னர் ரோசய்யா பட்டங்களை வழங்கினார்.
அதில், 42 பேர் முனைவர் பட்டமும், 106 பேர் ஆய்வியல் நிறைஞர் பட்டமும் பெற்றனர்; 14 பேர் தங்கப்பதக்கம் பெற்றனர். நிகழ்ச்சியில், உடற்கல்வியியல் மற்றும் விளையாட்டுப் பல்கலை துணைவேந்தர் மூர்த்தி உட்பட பலர் கலந்து கொண்டனர்.
பின், யு.ஜி.சி., எனும் பல்கலை மானியக் குழு துணைத் தலைவர் தேவராஜ் அளித்த பேட்டி:யோகா பட்டப்படிப்புக்காக, யு.ஜி.சி., அளிக்கும், 400 கோடி ரூபாய், 44 பல்கலைகளுக்கு பகிர்ந்தளிக்கப்படும். 'நெட்' எனப்படும் உதவிப் பேராசிரியர் பணிக்கான தேசிய தகுதித் தேர்வில், யோகா பாடமும் சேர்க்கப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.
No comments:
Post a Comment
உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.