Pages

Wednesday, January 27, 2016

'பேஸ்புக் - வாட்ஸ் ஆப்' ஜோடி வாடிக்கையாளருக்கு வசதிகள்

தகவல் அனுப்ப உதவும், 'ஆப்'களால் எழுந்துள்ள கடும் போட்டியை சமாளிக்க, முன்னணி சமூக வலைதளமான, 'பேஸ்புக்' உடன் இணைந்து, தகவல்கள், ஆவணங்கள் பரிமாற்றம், 'வீடியோ' அழைப்பு உள்ளிட்ட பல்வேறு புதிய வசதிகளை, 'வாட்ஸ் ஆப்' ஏற்படுத்தித் தந்துள்ளது. மொபைல் போனில் தகவல் அனுப்ப உதவும், 'வாட்ஸ் ஆப்'புக்கு போட்டியாக, 'லைன், வைபர், மெஸேஜ்மீ, வாக்ஸர், ஹேடெல், டெக்ஸ்ட்நவ், டாக்கடோன், கீக்' என, ஏராளமான, 'ஆப்'கள், மக்களிடையே பயன்பாட்டில் உள்ளன. இந்தியாவில், வாட்ஸ் ஆப் முன்னணியில் உள்ளது.


சமூக வலைதளங்களில் ஜாம்பவானாக திகழும், பேஸ்புக், 'வாட்ஸ் ஆப்'பை, பெருந்தொகைக்கு விலைக்கு வாங்கியது. அதைத் தொடர்ந்து, வாட்ஸ் ஆப்பில் பல்வேறு மாற்றங்களை, பேஸ்புக் புகுத்தி வருகிறது. தற்போது, பிற, 'ஆப்'களால் எழும் போட்டியை சமாளிக்கும் நோக்கில், 'வாட்ஸ் ஆப்'பில் புதிய அம்சங்கள் புகுத்தப்பட்டுள்ளன.
'வீடியோ' அழைப்பு, பேஸ்புக்குடன், தகவல் மற்றும் ஆவணங்கள் பரிமாற்றம் உள்ளிட்ட பல வசதிகள், வாட்ஸ் ஆப்பில் சேர்க்கப்பட்டுள்ளன. வாட்ஸ் ஆப்பை பயன்படுத்தி பயனாளிகள் மேற்கொள்ளும் அழைப்புகள் மற்றும், 'சாட்டிங்' பதிவுகளை, 'வாட்ஸ் ஆப்'போ, வேறு மூன்றாம் நபரோ, பயன்படுத்த முடியாதபடி, தடுக்கும், 'எண்ட் டு எண்ட் என்க்ரிப்ஷன் இண்டிகேட்டர்' வசதியும், புதிய அம்சமாக இணைக்கப்படுகிறது.

வாங்க பகிரலாம்!
புகைப்படங்களையும், வீடியோக்களையும் தனக்கு தெரிந்தவர்களுடன், உடனுக்குடன் பகிர்ந்து கொள்ள, 'வாட்ஸ் ஆப்' பயன்படுகிறது. இந்தியாவில், பெரும்பாலானோர் பயன்படுத்தும், 'ஆப்'பாக வாட்ஸ் ஆப் திகழ்கிறது. இதன் மூலம், படங்கள், ஒலிப்பதிவுகள், வீடியோக்கள் பகிரப்பட்டு, சில நிமிடங்களில் மக்களிடையே பரபரப்பாக பேசப்படும் விஷயங்களாக உருமாறுவது, சமீபத்திய, 'டிரெண்ட்' ஆக உள்ளது. வாட்ஸ் ஆப்பில் பகிரப்படும் அனைத்தையும், பேஸ்புக்கிலும் பகிரும் வசதி சேர்க்கப்படுவதால், பிற, 'ஆப்'களை, ஓரங்கட்ட முடியும் என, பேஸ்புக் நிறுவனம் கருதுகிறது.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.