ஆசிரியர்கள் சண்டையால், கல்வி பாதிக்கப்படுவதாக கூறி, பெற்றோருடன், மாணவர்கள் சாலை மறியல் செய்தனர். வேலுார் மாவட்டம், ஜோலார்பேட்டை அடுத்த அச்சமங்கலத்தில், அரசு மேல்நிலைப் பள்ளி உள்ளது. இங்கு தலைமை ஆசிரியையாக, சூரியசெல்வி மற்றும், 10 ஆசிரியர்கள், ஒரு உடற்கல்வி ஆசிரியர், ஒரு ஆய்வக உதவியாளர் என, 13 பேர் உள்ளனர். 286 மாணவ, மாணவியர் படித்து வருகின்றனர்.
தலைமை ஆசிரியை சூரியசெல்வி, கணக்கு ஆசிரியர் மதன், தமிழ் ஆசிரியர் வெங்கடேசன் இடையே அடிக்கடி தகராறு நடந்து வந்தது. நேற்று முன்தினம் பள்ளியில், பெற்றோர் ஆசிரியர் சங்க தேர்தல் குறித்து ஆலோசனை நடந்தது.அப்போது, மூன்று பேருக்கும் இடையே வழக்கம் போல வாய்த்தகராறு ஏற்பட்டது. இதுகுறித்து தலைமை ஆசிரியை சூரியசெல்வி, தன்னை தரக்குறைவாக பேசி, ஜாதி பெயரை சொல்லி திட்டி, அடித்ததாக, ஆசிரியர்கள் மதன், வெங்கடேசன் மீது ஜோலார்பேட்டை போலீசில் புகார் செய்தார்.
ஜோலார்பேட்டை போலீசார், நேற்று காலை, 11:00 மணிக்கு, பள்ளிக்கு வந்தனர். தகவல் அறிந்த பள்ளி மாணவ, மாணவியர், பெற்றோருடன் வந்து, பள்ளி எதிரில் சாலை மறியல் செய்தனர். போலீசார் பேச்சு நடத்தினர். அப்போது, பள்ளி தலைமை ஆசிரியை, ஆசிரியர்கள் சண்டை யால், மாணவர்களின் கல்வி பாதிக்கப்படுகிறது. அதனால், இவர்கள் மூவரையும் இடமாற்றம் செய்ய வேண்டும் என, பெற்றோர் கூறினர்.
No comments:
Post a Comment
உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.