Pages

Friday, January 1, 2016

ஐந்தாவது தளத்தில் கல்வித்துறை ஆபீஸ்

மாவட்ட கல்வித்துறை அலுவலகங்கள், புதிய கலெக்டர் அலுவலக வளாகத்துக்கு, மாற்றப்பட்டுள்ளன. கல்வித்துறைக்கு, ஐந்தாவது தளம் ஒதுக்கப்பட்டுள்ளது. முதன்மை கல்வி அலுவலகம், திருப்பூர் கே.எஸ்.சி., அரசு பள்ளி வளாகத்திலும்; மாவட்ட தொடக்க கல்வி அலுவலகம், பழைய நகர் மாநகராட்சி பள்ளி வளாகத்திலும் செயல்பட்டன. வாலிபாளையம் மாநகராட்சி பள்ளி மேல்மாடியில், மாவட்ட கல்வி அலுவலகம் செயல்பட்டது.


கல்வித்துறைக்கு என, தனியாக கட்டட வசதி இல்லாததால், பல ஆண்டுகளாக, அரசு பள்ளிகளில் குறிப்பிட்ட அறைகளை அபகரித்து, கல்வித்துறை அலுவலகங்கள் செயல்பட்டன. போதிய இடவசதி இல்லாததால் ஆவணங்கள், பதிவேடுகளைசரிவர பராமரிக்க முடியாமல் ஊழியர்கள் அவதிப்பட்டனர். தற்போது, ஒருங்கிணைந்த கலெக்டர் அலுவலகத்தில், கல்வித்துறைக்கு அறை ஒதுக்கப்பட்டதால், அலுவலகங்கள் மாற்றப்பட்டுள்ளன. ஐந்தாவது தளத்தில், 501, 502, 503 மற்றும், 504 ஆகிய அறைகள், மாவட்ட கல்வித்துறை அலுவலகமாக செயல்படும்.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.