Pages

Tuesday, January 12, 2016

அரசு மருத்துவமனைகளில் 'லேப் டெக்னீஷியன்' வேலை

அரசு மருத்துவமனைகளில், 'லேப் டெக்னீஷியன்' 710 பேர், மாதம், 8,000 ரூபாய் என்ற தொகுப்பூதியத்தில் நியமிக்கப்பட உள்ளனர்; இதற்கு, பிப்., 1க்குள் விண்ணப்பிக்க வேண்டும். அரசு மருத்துவமனைகளில், லேப் டெக்னீஷியன் பணிக்கு, 8,000 ரூபாய் சம்பளம் என்ற தொகுப்பூதிய அடிப்படையில், 710 பேரை சேர்க்க, அரசு முடிவு செய்துள்ளது.


இதுகுறித்து, மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியமான, எம்.ஆர்.பி., வெளியிட்ட அறிவிப்பில், 'விண்ணப்பங்களை, www.mrb.tn.gov.in என்ற இணையதளம் வழியாக பெற்று, பிப்., 1க்குள் விண்ணப்பிக்க வேண்டும். லேப் டெக்னீஷியன் படிப்பு, பிளஸ் 2, 10ம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில், ஆட்கள் தேர்வு செய்யப்படுவர்' என, தெரிவிக்கப்பட்டு உள்ளது.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.