Pages

Friday, January 15, 2016

பொங்கல் பண்டிகையின் வரலாறு மற்றும் விதிமுறைகள் - படையல் பூஜை செய்திட உகந்த நல்ல நேரம்

தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாள். இந்த நன்னாளிலே சுப ஓரைகளில் சூரிய பகவானுக்கு பூஜை செய்தால், அஷ்ட லஷ்மிகளும் நம் வீட்டில் வாசம் செய்யும், நம்மை காக்கும். மன்மத வருடம், தை மாதம் முதல் நாள் 15.1.2016 வெள்ளி அன்று பொங்கல் பானை வைத்து பொங்கல் பொங்கவும், சூரியனுக்கு படையல் பூஜை செய்திடவும் உகந்த நல்ல நேரம் காலை 9 மணி முதல் 10.30 மணி வரை பொங்கல் வைத்து வழிபடலாம். 


சூரிய பகவானுக்கு உகந்த நண்பகல் 12.00 – 01.00 PM சூரிய ஓரையில் பூஜை செய்தால், தன-தான்யம் பெருகும். காலை 9.30 மணிமுதல் 10.30 மணிவரை சுக்கிர ஓரையில் பொங்கல் வைத்தால் தனம், தானியம் பெருகும். அதேபோல, மதியம் 01.00 – 02.00 மணி அளவில் சுக்கிர ஓரையும், மதியம் 02.00 – 03.00 மணிவரை புதன் ஓரையும் சிறந்ததே. சந்திர ஓரையில் பொங்கல், வடை, பாயசம், 21 வகையான காய்கறிகளை கொண்டு சமைத்து, சூரியபகவானுக்கு படைத்து வணங்க வேண்டும். அப்போது 21 வகையான சமைக்காத பச்சை காய்கறிகளையும் வைத்து, அத்துடன் மஞ்சள் கொத்து, இஞ்சிகொத்து, கரும்பும் வைத்து, சூரியபகவானுக்கு கற்பூர ஆரத்தி காட்டி வணங்க வேண்டும். இதனால் சூரியபகவானின் ஆசி பரிபூரணமாக கிட்டும்.

1 comment:

  1. அனைவருக்கும் இனிய பொங்கல் நல் வாழ்த்துக்கள் அன்புடன் சு.முருகன் கொழப்பலூர்

    ReplyDelete

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.