Pages

Friday, January 29, 2016

நிதி நெருக்கடியில் தள்ளாடுது அரசு; அரசு பணியாளர் சங்கம் குற்றச்சாட்டு

தமிழ்நாடு அரசு பணியாளர் சங்க மாநிலத் தலைவர் செல்வராஜ் கூறியதாவது: அரசு பணியாளர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக உறுதி அளித்த முதல்வர், ஐந்து ஆண்டுகளில், எந்த கோரிக்கைகளையும் நிறைவேற்றவில்லை. எனவே, தினம் ஒரு நகரம் என, சென்னை, திருச்சி, மதுரையில் மறியல் போராட்டம் நடத்த உள்ளோம்.
தமிழக அரசு, நிதி நெருக்கடியில் தள்ளாடுகிறது. அ.தி.மு.க., ஆட்சிக்கு வந்தபோது, 1.25 லட்சம் கோடியாக இருந்த கடன் தற்போது, 2 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஓய்வு பெற்றவர்களுக்கு, 40 ஆயிரம் கோடி ரூபாய் வரை, பாக்கி வைக்கப்பட்டுள்ளது. அரசு பணியாளர்களின் கோரிக்கைகளை ஏற்கும் கட்சிக்கே, சட்டசபை தேர்தலில் ஆதரவு தருவோம். இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.