Pages

Friday, January 1, 2016

ஆலோசனை வழங்கிய ஆசிரியர்கள்!

டி.வி.ஆர்., அகாடமி, தினமலர் கல்வி மலர் சார்பில், சென்னை அரசு, மாநகராட்சி பள்ளி பிளஸ் 2 மாணவர்களுக்கு, அதிக மதிப்பெண்கள் பெறுவதற்கான ஜெயித்துக் காட்டுவோம் வழிகாட்டி நிகழ்ச்சி, நேற்று முன்தினம், சென்னை பல்கலைக்கழக நுாற்றாண்டு விழா அரங்கில் நடந்தது.

காலையில், அறிவியல் பிரிவு மாணவர்களுக்கும்; மதியம், கலைப்பிரிவு மாணவர்களுக்கும் ஆலோசனைகள் வழங்கப்பட்டன. காலை நிகழ்ச்சியில், திருவல்லிக்கேணி, இந்து மேல்நிலைப் பள்ளி ஆசிரியர்கள், வி.சி.கோபி ஆனந்த் இயற்பியல் பாடத்திற்கும்; சரவணன் வேதியியல் பாடத்திற்கும் ஆலோசனை வழங்கினர். வண்ணாரப்பேட்டை, பி.ஏ.கே.பழனிச்சாமி மேல்நிலைப் பள்ளி ஆசிரியர், டி.ராஜ்  கணித பாடத்திற்கும், அரும்பாக்கம் சென்னை அரசு மேல்நிலைப் பள்ளி ஆசிரியர் சேகர்  உயிரியியல் பாடத்திற்கும் ஆலோசனை வழங்கினர்.

மதிய நிகழ்ச்சியில், திருவல்லிக்கேணி இந்து மேல்நிலைப் பள்ளி ஆசிரியர் வி.எஸ்.சீனிவாசன் கணக்குப் பதிவியல் பாடத்திற்கும்; ஏ.பி.பரேக் குஜராத்தி வித்யாமந்திர் மேல்நிலைப் பள்ளி ஆசிரியர், ஏ.பி.பழனி பொருளியல் பாடத்திற்கும்; திருவல்லிக்கேணி இந்து மேல்நிலைப் பள்ளி ஆசிரியர், வி.எஸ்.சீனிவாசன் வணிகவியல் பாடத்திற்கும் ஆலோசனை வழங்கினர்.

திருவல்லிக்கேணி இந்து மேல்நிலைப் பள்ளி ஆசிரியர் ஆர். ரமேஷ் கணினி அறிவியல் பாடத்திற்கும்; வண்ணாரப்பேட்டை பி.ஏ.கே.பழனிச்சாமி மேல்நிலைப் பள்ளி ஆசிரியர் ரத்தன் ராஜ் வணிக கணித பாடத்திற்கும் ஆலோசனை வழங்கினர்.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.