Pages

Monday, January 18, 2016

கார், பைக் இன்சூரன்ஸ் காகித நகல் கையில் வைத்திருக்க தேவையில்லை

கார், பைக் உள்ளிட்ட வாகனங்களின் இன்சூரன்ஸ் ஆவணங்கள், விரைவில் மின்னணு முறையில் மாற்றப்பட உள்ளதால், போக்குவரத்து போலீசாரின் சோதனையின் போது அவற்றின் நகல் எடுத்துச் செல்ல வேண்டிய தேவை இருக்காது. இன்சூரன்ஸ் கட்டுப்பாடு ஆணையம், 'இ - வாஹன் பீமா' என்ற புதிய திட்டத்தை துவக்கி உள்ளது. இதன்படி, இன்சூரன்ஸ் ஆவணங்கள் அனைத்தும் மின்னணு முறையில் மாற்றப்பட உள்ளன. 


திட்டத்தின் சிறப்பம்சங்கள்:
* வாகன உரிமையாளருக்கு, இ - மெயில் அல்லது எஸ்.எம்.எஸ்., மூலம்இன்சூரன்ஸ் பாலிசி விவரங்கள் அனுப்பப்படும் 
* அதில், 'பார் கோடு, கியு.ஆர்., கோடு' போன்ற ரகசிய பதிவு கள் இருக்கும் 
* 'ஸ்கேனிங்' இயந்திரம் மூலம், 'கியு.ஆர்., கோடு' ஸ்கேன் செய்யப்படும் போது இன்சூரன்ஸ் தகவல் மையத்தின் தொகுப்பில் உள்ள தகவல் தெரியவரும் 
* கியு.ஆர்., கோடு முறையால் மோசடிகள் தடுக்கப்படும் 
* இதை, ஸ்மார்ட் போன்கள் மற்றும் போக்குவரத்து போலீசார் கையில் உள்ள மின்னணு கருவி மூலம் படிக்க முடியும்; இதனால், வாகன காப்பீட்டு ஆவணங்களை காகித நகலாக எடுத்துச் செல்ல வேண்டிய தேவையில்லை 'இன்சூரன்ஸ் ஆவணம் கிடைக்கவில்லை' என, வாகன உரிமையாளர் புகார் செய்யும் நிலையும் வராது 
* இன்சூரன்ஸ் நிறுவனங்களின் செலவு கணிசமாக குறையும். இந்த திட்டம், முதல்வர்சந்திரசேகர ராவ் தலைமையிலான தெலுங்கானா மாநிலத்தில் ஏற்கனவே அமலில் உள்ளது.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.