Pages

Wednesday, January 13, 2016

குழந்தைகளை கவனிக்க பெண்களுக்கு 5 நாள் 'லீவு'-மத்திய அரசு முடிவு

குழந்தைகளை கவனித்து கொள்ள, பெண் ஊழியர்கள், ஐந்து நாட்கள் விடுமுறை எடுக்க மத்திய அரசு அனுமதி அளிக்க உள்ளது. அரசு துறைகளில் பணியாற்றும் பெண்கள், தங்கள் பணி நேரத்தில் காலத்தில், குழந்தைகளை கவனித்து கொள்ள, இரண்டு ஆண்டுகள், அதாவது, 730 நாட்கள் விடுமுறை எடுக்கலாம். குழந்தைகளுக்கு தாயின் கவனிப்பு தேவை என்பதால், பெண் ஊழியர்களுக்கு இந்த சலுகை வழங்கப்படுகிறது. எனினும், குழந்தைகளுக்கு, 18 வயதாகிவிட்டால், இந்த சலுகை வழங்கப்படமாட்டாது.


இந்நிலையில், குழந்தைகளை கவனித்து கொள்வதற்காக, ஒரே கட்டமாக, ஐந்து நாட்கள் வரை விடுமுறை எடுக்க, பெண் ஊழியர்களுக்கு அனுமதி வழங்க, மத்திய அரசு ஆலோசித்து வருகிறது. மேலும், குழந்தைகளை கவனித்துக் கொள்ள, பெண்கள், ஐந்து நாட்கள் விடுமுறை கேட்டால், உடன் வழங்க வேண்டும் எனவும், உயர் அதிகாரி களுக்கு உத்தரவிட மத்திய அரசு முடிவு செய்துஉள்ளது.

இது தொடர்பான கருத்துகளை, 27ம் தேதிக்குள் தெரிவிக்குமாறு, மத்திய அரசின் அனைத்து துறைகளுக்கும், மத்திய பணியாளர் மற்றும் பயிற்சி துறை கேட்டுள்ளது.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.