Pages

Thursday, January 28, 2016

சிவகாசியில் ஜன.31 இல் பள்ளி மாணவர்களுக்கு சதுரங்கப் போட்டி

சிவகாசி ரத்தனம் செஸ் அகாதெமி சார்பில் விருதுநகர் மாவட்ட அளவில் பள்ளி மாணவ- மாணவிகளுக்கு சதுரங்கப் போட்டி சிவகாசியில் ஜன.31 ஆம் தேதி நடைபெற உள்ளது என அந்த அமைப்பின் தலைவர் வி.சுந்தரபாண்டியன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் புதன்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:  இப்போட்டியில் 9,11 மற்றும் 15 வயதுக்குள்பட்ட மாணவ- மாணவிகள் பங்கேற்கலாம். 9 மற்றும் 15 வயது பிரிவில் முதல் 2 இடங்களை பிடிக்கும் மாணவ- மாணவிகள் தமிழ்நாடு மாநில சாம்பியன் ஷிப் போட்டிக்கு தேர்வு செய்யப்படுவர்.
 இப்போட்டி சிவகாசியில் உள்ள அண்ணாமலை நாடார்- உண்ணாமலையம்மாள் நகராட்சி மேல்நிலைப் பள்ளியில் நடைபெற உள்ளது. மேலும் விவரம் பெற 94433-74894 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.