Pages

Friday, January 29, 2016

குரூப் - 2 ஏ தேர்வு விடைகள் வெளியீடு

தமிழக அரசு துறையில் குரூப் - 2 ஏ மூலம் நிரப்பப்படும் நேர்முகத் தேர்வு அல்லாத 1,947 காலிப் பணியிடங்களுக்கான தேர்வு, ஜன., 24ம் தேதி நடந்தது; எட்டு லட்சம் பேர் எழுதினர்.இந்த தேர்வில், பொது தமிழ், பொது ஆங்கிலம் மற்றும் பொது கல்வி ஆகியவற்றுக்கு, தலா, 300 மதிப்பெண் என, மூன்று தாள்களுக்கு தேர்வு நடந்தது. இந்த தேர்வுக்கான விடைகளை, அரசு பணியாளர் தேர்வு வாரியமான டி.என்.பி.எஸ்.சி., நேற்று வெளியிட்டது.


இந்த விடையில் தவறுகள் இருந்தால் பிப்., 3ம் தேதிக்குள், டி.என்.பி.எஸ்.சி.,க்கு தெரிவிக்கலாம். இதற்கிடையில், கிராம நிர்வாக அலுவலரான வி.ஏ.ஓ., தேர்வில், தற்காலிகமாக தேர்வு செய்யப்பட்டோருக்கு, சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் கவுன்சிலிங் முறையில், மாவட்ட ஒதுக்கீடு, பிப்., 1ம் தேதி, காலை 10:00 மணிக்கு, டி.என்.பி.எஸ்.சி., தலைமை அலுவலகத்தில் நடக்கும் என, அறிவிக்கப்பட்டு உள்ளது.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.