வடகிழக்கு பருவமழை வெள்ளத்தில், 23 மாநகராட்சி பள்ளிகளில் வெள்ளம் புகுந்தது. அதனால், 2.5 கோடி ரூபாய் மதிப்பிலான பொருட்கள் சேதம் அடைந்துள்ளன.வடகிழக்கு பருவமழையால், அடையாற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு, தென்சென்னையின் பல்வேறு பகுதிகளில் பாதிப்பை ஏற்படுத்தியது. கூவம் வெள்ளத்தால், கோயம்பேடு, அண்ணாநகர், அமைந்தகரை பகுதிகளில் பாதிப்பு ஏற்பட்டது.
இதில், சென்னை மாநகராட்சி பராமரிப்பில் உள்ள, 23 பள்ளிகளுக்குள் வெள்ளம் புகுந்ததில், அங்கிருந்த 2.5 கோடி ரூபாய் மதிப்பிலான, நாற்காலி, கணினி, மடிக்கணினிகள் உள்ளிட்ட கருவிகள் சேதம் அடைந்தன. ஆய்வக கருவிகளும் பழுதடைந்துள்ளன. அந்த பள்ளிகளில் சீரமைப்பு பணிகள் வேகமாக நடந்து வருகின்றன.
இதற்கிடையே, அடையாற்றங்கரையோரம் உள்ள ஆக்கிரமிப்பாளர்கள், மறுகுடியமர்வு செய்யப்பட்டு வருவதால், கரையோரத்தில் உள்ள, எட்டு மாநகராட்சி பள்ளிகளில், முழுவதுமாக மாணவர் எண்ணிக்கை குறைகிறது. இதனால் அடுத்த நிதியாண்டு முதல் அந்த பள்ளிகள் செயல்படுமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
No comments:
Post a Comment