Pages

Sunday, January 24, 2016

டி.என்.பி.எஸ்.சி., குரூப்- 1மெயின் தேர்வு முடிவு தாமதம்

தமிழகத்தில் குரூப்- 1 மெயின் தேர்வு முடிந்து ஆறுமாதமாகியும், முடிவுகள் இன்னும் அறிவிக்கப்படாததால் எழுதியவர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். தமிழகத்தில், டி.என்.பி.எஸ்.சி., குரூப் -1 முதல் நிலை தேர்வு கடந்த ஓராண்டுக்கு முன் நடந்தது. டி.எஸ்.பி., டி.இ.ஓ., சப் கலெக்டர், வணிகவரித்துறை ஆணையர், நகராட்சி கமிஷனர் உட்பட பல பதவிகளில், 79 காலியிடங்களுக்கான தேர்வு நடந்தது.


இந்த தேர்வை, 2 லட்சம் பேர் எழுதினர். இதில், 4 1,000 பேர் மெயின் தேர்வுக்கு தேர்வாகினர். இவர்களுக்கான எழுத்துத் தேர்வு கடந்த ஜூனில் நடந்தது. இத்தேர்வு முடிந்து, ஆறு மாதங்களாகியும் இன்னும் முடிவுகள் வெளியாகவில்லை. தேர்தல் வரும் நேரத்தில் தேர்வு முடிவுகள் கிடப்பில் போடப்படுமோ என்ற அச்சம் எழுதியவர்கள் மனதில் தொற்றிக் கொண்டுள்ளது.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.