Pages

Saturday, January 16, 2016

ஜன.,18 முதல் மக்கள் தொகை கணக்கெடுப்பு பணி துவக்கம் :ஆசிரியருக்கு "பிரிண்ட் அவுட்' விண்ணப்பம் வழங்கல்

மக்கள் தொகை விபரத்தை உறுதிப்படுத்த சிவகங்கை மாவட்டத்தில் ஆசிரியர்களுக்கு கணக்கெடுப்பிற்கான "பிரிண்ட் அவுட்' விண்ணப்பங்கள் வழங்கப்பட்டுவிட்டது. ஜன.,18 முதல் இப்பணியை ஆசிரியர்கள் துவக்குகின்றனர். 2011ல் மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. இதில்,ஈடுபட்ட ஆசிரியர்கள் வீடுகள் தோறும் சென்று குடும்ப தலைவர், தலைவி பெயர், குழந்தைகள், அசையும், அசையா சொத்து, எலக்ட்ரானிக் பொருட்கள் இருப்பு விபரம் போன்று 42 வித விபரத்தை சேகரித்து, அதற்கான விண்ணப்பத்தில் பூர்த்தி செய்து, மாநில மக்கள் தொகை கணக்கெடுப்பு அலுவலகத்திற்கு அனுப்பினர்.
மீண்டும் துவக்கம்; இந்நிலையில், மீண்டும் தமிழகத்தில் மக்கள் தொகை விபரங்களை உறுதிப்படுத்தும் விதமாக, 2ம் கட்டமாக ஆசிரியர்களை கொண்டு வீடுகள் தோறும் கணக்கெடுப்பு நடத்த உத்தரவிட்டுள்ளனர். 2011ல் மாநகராட்சி, நகராட்சி,பேரூராட்சி, கிராம ஊராட்சி பகுதிகளில் கணக்கெடுப்பு நடத்திய அதே ஆசிரியர்களே இப்பணிகளில் ஈடுபட வேண்டும். இப்பணியை ஜனவரி 18ல் துவக்கி பிப்ரவரி 5க்குள் முடிக்க வேண்டும். கணக்கெடுப்பு எப்படி?2011ல் எடுத்த கணக்கெடுப்பு விபரத்துடன் கூடிய விண்ணப்பம் ஆசிரியர்களுக்கு "பிரிண்ட் அவுட்' செய்து வழங்கப்படும். அந்த விண்ணப்பத்துடன் வீடுகளுக்கு சென்று, வீட்டில் உள்ள குடும்ப தலைவர், தலைவி பெயர்கள், குழந்தைகள் மற்றும் இதர விபரம் சரியாக உள்ளதா என சரிபார்க்க வேண்டும். இதில் கூடுதலாக ஆதார் அட்டை, ரேஷன் கார்டு, அலைபேசி எண்களை கண்டிப்பாக கேட்டு பெற்று, விண்ணப்பத்தில் குறிப்பிடவேண்டும். 2011க்கு பின் பிறந்த குழந்தை இருந்தால், அவர்களது விபரம், மாறுதலாகி சென்ற குடும்பத்தினர், புதியதாக திருமணம் முடித்தோர் விபரத்தை சேகரிக்க வேண்டும் என தெரிவித்துள்ளனர். ஜன.,18ல் துவக்கம்:சிவகங்கை மாவட்டத்தில், தாலுகாவிற்கு குறைந்தது 100 ஆசிரியர்கள் வீதம், மக்கள் கணக்கெடுப்பு பணியில் ஈடுபட உள்ளனர். எட்டு தாலுகாக்களில் கிட்டத்தட்ட 900 ஆசிரியர்கள் வரை ஈடுபடுவர். இப்பணியை பிப்.,5ம் தேதிக்குள் முடிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆசிரியர்களுக்கான பூர்த்தி செய்யப்பட்ட "பிரிண்ட் அவுட்' விண்ணப்பங்கள், கலெக்டர் அலுவலகம் மூலம் வழங்கப்பட்டு வருகிறது. எனவே, வீடுகளுக்கு வரும் ஆசிரியர்களிடம் உண்மையான தகவலை வழங்கி ஒத்துழைப்பு தரவேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.